இன்ஸ்டா, ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் டிரெண்டிங்கில் இருக்கிறது `குக் வித் கோமாளி’ ஷோ. அதற்கு முக்கிய காரணம் புகழ்.
இன்று வைரல் செலிபிரிட்டியாக இருக்கும் புகழ், சென்னையில் சந்திக்காத பிரச்னைகளே கிடையாது. அவர் பகிர்ந்த ஃப்ளாஷ்பேக் இதோ...
என் சொந்த ஊர் கடலூர். ஸ்கூல் முடிச்சதும் 2008-ல் சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டேன். பிரசாத் ஸ்டூடியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.
தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் !
அங்கதான் `பானா காத்தாடி' படத்துல நடிச்ச உதயராஜ் நட்பு கிடைச்சது. அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில உதவி இயக்குநரா வேலை செஞ்சிகிட்டு இருந்தார்.
உனக்கு ஹியூமர் நல்லா வருது, உன் முகம் இந்த ஷோவுக்கு நல்லா பொருந்திப் போகும்ன்னு சொல்லி, கலக்கப் போவது யாரு சீஸன் 6 ஆடிஷன்ல கலந்துக்க வெச்சாரு.
ஆனா, ஆடிஷன்லையே நான் எலிமினேட் ஆகிட்டேன். என் முடிதான் பிரச்னைன்னு நினைச்சு மொட்டை அடிச்சுட்டு வந்து மீண்டும் ஆடிஷன்ல கலந்து கிட்டேன்.
அதுலயும் எலிமினேட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் அப்செட் ஆகிருச்சு, திரும்பவும் ஊருக்குப் போயிட்டேன். அங்கு கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யுறது போன்ற வேலைகளைக் கத்துக்கிட்டுப் பண்ண ஆரம்பிச்சேன்.
அதன் பிறகு சென்னை வந்து விட்டேன். சென்னை வந்ததும் என் போதாத நேரம் என் பவுச், சிடி எல்லாமே தொலைஞ்சு போயிருச்சு. அதன் பிறகு அந்தப் பொருள்களை வாங்கவும் வசதி இல்ல.
அதனால திரும்பவும் அதே வாட்டர் வாஷ் கம்பெனியில வேலை கேட்டு நின்னேன். `முதலாளி தப்பா எடுத்துக்காதீங்க...
ஊருக்குப் போயிட்டேன், அதான் இத்தனை நாள் வரலைன்னு முதலாளியை சமாதானப்படுத்தி வேலைக்குச் சேர்ந்தேன்.
அரிதானப் பழங்களின் மருத்துவ குணங்கள் !
அப்புறம் 15 நாள் கழிச்சு ஒரு போன் வந்துச்சு. சிரிப்புடான்னு ஒரு ஷோவுல பாம்பாட்டி கெட் அப் போடணும்னு கூப்பிட்டாங்க. இந்த வாய்ப்பும் உதய் மூலமா வந்ததுதான்.
நானும் போய் நடிச்சுக் கொடுத்தேன். அப்படியே சின்னச் சின்ன ரோலுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்குனுச்சு.
கலக்கப் போவது யாரு சீஸன் 5 முடிஞ்ச நேரம். தீனா, அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் சார்கிட்ட, அவரோட பெர்ஃபாமன்ஸுக்கு என்னை கேமியோவா இருக்க பெர்மிஷன் கேட்டார்.
அப்புறம் லேடி கெட் அப் கொடுத்தாங்க. அப்படியே லேடி வாய்ஸும் கத்துக்கிட்டேன். லேடி கெட் அப்புக்கு புகழ் ஆப்டா இருப்பான்னு சொல்ற அளவுக்கு நல்லா பர்ஃபார்ம் பண்ணேன்.
கலக்கப் போவது யாரு சீஸன் 6-ல் என்ன எலிமினேட் பண்ணாங்க, அதே சீஸன் 6-ல டைட்டில் வின்னர் வினோத்துக்கு கேமியோவா என்ட்ரி கொடுத்தேன்.
கடந்த சூப்பர் சிங்கர்ல ஸ்பூஃப் ரவுண்ட்ல அந்நியன், அம்பி ரோல் பண்ணேன். நல்லா வைரல் ஆச்சு. அதன் பிறகு வந்த நிறைய ஷோக்கள்ல கலந்து கிட்டேன்.
அப்புறம் குக் வித் கோமாளி வாய்ப்பு தேடி வந்துச்சு. இத்தனை வருஷ உழைப்புக்கு, நான் எதிர் பார்க்காத அளவுக்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.
விஜய் டிவி எனக்கு பெரிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கு. எனக்குள்ள இப்படி யொரு திறமை இருக்குன்னு லேட்டா தான் எனக்குப் புரிஞ்சது.
நிறம் மாறிய உப்பு சோடா ஏரி எனப்படும் பழமையான லோனார் ஏரி !
அதற்கு முன்னாடி நிறைய கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கேன். நான் வெறும் 100 ரூபாயோட சென்னைக்கு வந்தவன். என் அண்ணன் சென்னையில ஏர்டெல்ல வேலை செஞ்சிகிட்டு இருந்தார்.
அங்கேயே எனக்கும் வேலை வாங்க ஒருவர்கிட்ட உதவி கேட்டிருந்தார். அந்த நபர் என்னை தாம்பரத்துக்கு வரச் சொன்னார். நான் தாம்பரத்துக்கு வந்து ஒரு ரூபாய் காயின் போன்ல, கால் பண்ணேன்.
அப்புறம் எனக்கு வேலை வாங்கித் தர்றேன்னு சொன்னவர், எல்.ஐ.சி பில்டிங் பக்கத்துல புதுப்பேட்டையில் ஒரு ஆபீஸுக்கு என்னைக் கூட்டிகிட்டுப் போனார்.
இங்கெல்லாம் உட்காரக் கூடாதுன்னு என்னை துரத்தி விட்டுட்டாங்க. அந்த மனுஷனும் திரும்ப வரவேயில்ல. கையில் போனும் இல்ல. நடுத்தெருவுல நின்னேன்.
சென்னையில் ஒண்ணுமே தெரியாது. அழுகையா வந்துருச்சு. அப்படியே நடந்து வந்தப்போ வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவைன்னு போர்டு பார்த்தேன்.
கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் !
அங்க போய் வேலை கேட்டேன். என்ன வேலை தெரியும்னு கேட்டாங்க. கண்ணு பார்த்து, கைகள் செய்யுற எந்த வேலையா இருந்தாலும் செய்வேன்னு சொன்னேன்.
வெல்டிங் வேலையைக் கொடுத்தாங்க. அங்க ஒரு நாளைக்கான சம்பளம்னு 100 ரூபாய் கொடுத்தாங்க. அங்கிருந்து அந்தக் காசை வச்சிகிட்டு எங்க அண்ணனைப் பார்க்க தாம்பரம் போனேன்.
இந்த மாதிரி ஏமாந்துட்டேன்னு சொன்னேன். சரி விடு கெடச்ச வேலையைப் பாருன்னு அண்ணன் சொன்னார். நான் கொஞ்ச நாள் வெல்டிங் வேலை பார்த்தேன்.
இப்படியே நிறைய வேலைகள் செஞ்சேன். சென்னையில நான் பார்க்காத வேலையே இல்லைன்னு சொல்லலாம். கடைசியா பிரசாத் ஸ்டியோ வாசல்ல லாரிக்கு கிரீஸ் அடிச்சிட்டு இருந்தேன்.
புருவத்தில் உள்ள வெள்ளை முடியை கருமை ஆக்குவது எப்படி?
சாக்கு துணி போட்டுட்டு, உடல் முழுக்க அழுக்கா, முகத்துல கறுப்பா கிரீஸ் அப்பிக்கிட்டு வேலை செஞ்சி கிட்டு இருப்பேன். அப்போ என்னைக் கடந்து நடிகர்களெல்லாம் உள்ளே போவாங்க.
இப்போ பிரசாத் ஸ்டியோக்குள்ளவே டிப் டாப்பா டிரெஸ் போட்டு கிட்டு நடிக்கிறேன். அதே வாசல்ல பேன்ட் ஷர்ட் போட்டு கிட்டு உள்ளே போறேன் என்றார் உற்சாகமான குரலில்.... நன்றி விகடன்.
Thanks for Your Comments