பைக்கில் ஆண் சடலத்துடன் சாலையில் சுற்றித்திருந்த தம்பதியினரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது சந்தேகித்த காவல்துறை அவர்களின் வாகனத்தை மடக்கி சாக்கு மூட்டையை பிரித்து சோதித்து பார்த்த போது, அதில் ஆண் சடலம் இருப்பது கண்டு திடுக்கிட்டனர்.
மூட்டைக்குள் வாலிபர் ஒருவருடைய உடல் இருப்பதை கண்டு போலீஸுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து விசாரிக்கையில், விசாரணையில், அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தேவேந்திரசிங் (41), அவரது மனைவி சாயா (33) என்பதும், இவர்கள் காட்டூர் திருக்குளம் பகுதியில் வசிப்பதும் தெரிந்தது.
ஒரு முறை இருவரும் தனிமையில் இருந்த போது, அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் மனோஜ். அதை அழித்து விடும் படி சாயா பலமுறை கேட்டுள்ளார்.
ஆனால், தன்னுடன் நிரந்தரமாக வாழாவிட்டால் இந்த வீடியோவை கணவன் தேவேந்திர சிங்கிடம் காட்டி விடுவதாக கூறி சாயாவை மிரட்டியுள்ளார் மனோஜ்.
இதனால் அச்சமடைந்த சாயா, இந்த விஷயத்தை குறித்து கணவரிடம் கூறினார். இது தேவேந்திர சிங்குக்கு ஆத்திரத்தை மூட்டியது.
நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் மனோஜ் வீட்டுக்கு சென்ற அவர், உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக்
அதற்காக மனோஜ் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கணவனும், மனைவியும் பைக்கில் கொண்டு செல்ல முயன்ற போது போலீசிடம் மாட்டிக்கொண்டனர்.
வாலிபர் மனோஜின் உடலை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அர்ட்டிகேரியா என்கிற காணாக்கடி !
இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Thanks for Your Comments