டெல்லி போலீசாரின் தற்போதைய செயலை பார்த்தால். காசிப்பூரில் நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை இப்போது ஒவ்வொன்றாக பிடுங்கி கொண்டிருக்கிறார்களாம்.
அதே போல, வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தன.
அளவுக்கு அதிகமான குளிர், கொட்டி தீர்க்கும் உறைபனியில் விவசாயிகள் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலும் பெரும்பாலும் வயசான தாத்தாக்கள் தான் இரும்பு மனசுடன் டெல்லி நுழை வாயிலில் மிரட்டலாக போராட்டத்தில் உட்கார்ந்துள்ளனர்.
இந்த 3 மாசமாகவே சரியான வழியில், சாத்வீகமான முறையில் சென்று கொண்டிருந்த போராட்டம், குடியரசு தினத்தன்று வன்முறை சம்பவத்தால் திசை திருப்பப்பட்டு விட்டது.
எனினும் தங்கள் போராட்டத்தை கைவிட விரும்பாத விவசாயிகள், டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் குவிந்துள்ளனர்.
எப்படி அண்டை நாடுகளிடம் இருந்து இந்தியாவை காக்க வேலிகள் போடப்படுமோ, அது போல, டெல்லியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த கான்கிரீட் வேலிகள் போடப்பட்டுள்ளன.
நம் இந்தியாவை பற்றி நாம் அறிந்திராத முக்கியமான தகவல்கள் !
சிமெண்ட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, இதுவரை செய்யாத ஒரு ஐடியாவையும் டெல்லி போலீஸ் கையில் எடுத்தது.
அதன்படி, நடுரோட்டிலேயே ஆணிகளை நட்டு வைத்தது. யாரும் அந்த பக்கம் வண்டியை எடுத்து கொண்டு வந்து விடக்கூடாதாம்.
அப்படியே வந்தாலும் அந்த வண்டி பஞ்சர் ஆகிவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஆணிகளை போட்டு வைத்திருந்தனர்.
இந்த ஆணி பதிக்கும் வேலை பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. டெல்லி காவல்துறையை ஒட்டு மொத்தமாக அத்தனை பேரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
விவசாயிகள் உங்களுக்காக வயலில் கால் பதித்து சோறு கொடுக்கிறார்கள். நீங்கள் அவர்களின் கால்களில் ஆணியைப் பதித்து அவர்களை புண்ணாக்கப் போகிறீர்களா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதை விட முக்கியமாக டெல்லி காவல் துறையினர் அதீதமாக செய்த காரியத்தால் இது தற்போது சர்வதேச பிரச்சினையாகி விட்டது.
பாடகி ரிஹன்னா உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க டெல்லி போலீஸார் எடுத்த இந்த தேவையில்லாத நடவடிக்கைகள் தான் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
ஏன் ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது?
இந்நிலையில், போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்கள் முயன்றனர்.
கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் போன்றோர், விவசாயிகளை சந்திக்க பஸ்ஸில் சென்றனர்.
அங்கே கொஞ்ச தூரத்தில் பஸ்ஸை நிறுத்தி விட்டு, நடந்தே சென்றுள்ளனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
தற்போது, ரோட்டில் பதித்து வைத்திருந்த ஆணிகளை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !
தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஆணிகளை விவசாயிகள் அகற்றுவதாக சொல்லப்படுகிறது.
அதே போல, நடுரோட்டில் போட்டு வைத்திருந்த தடுப்பு வேலிகளையும் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவையில்லாத காரியங்களை செய்து விட்டு, தேவையில்லாத ஆணிகளை பிடுங்கி கொண்டுள்ளனர் டெல்லி போலீஸார்.
Thanks for Your Comments