இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடத்தில் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் இரத்த நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இப்படி ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதை, உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
ஆடைகள் மீது சாயமிடும் படிக் என்கிற இந்தோனீசியாவின் பாரம்பரியமான முறையில் செயல்படும் தொற்சாலையில் இருக்கும் சாயங்கள் வெள்ள நீரில் கலந்ததால் தான் வெள்ளம் இப்படி நிறம் மாறியிருக்கிறது.
மீண்டும் மழை நீருடன் சேரும் போது இந்த வண்ணம் காணாமல் போகும்" என அரசு அதிகாரி கூறியுள்ளார்.
பெகலோங்கனில் இருக்கும் நதிகள், இதற்கு முன்பும் இந்த படிக் தொழிற்சாலை சாயங்களால் நிறம் மாறியிருக்கின்றன. கடந்த மாதம் வேறு ஒரு கிராமத்தில் வெள்ளம் பச்சை நிறத்துக்கு மாறியது என கூறுகிறார்கள்.
வங்கிக்கடன் வாங்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவை !
மேற்கொண்டு மழை பொழியாமல் இருக்க, 'க்ளவுட் சீடிங்' எனப்படும் முறையில் சில ரசாயனங்களை மேகத்தில் செலுத்தப் போகிறார்கள் இந்தோனீசிய உள்ளூர் அதிகாரிகள்.
இந்தோனீசியாவில் சமீபத்தில் தான் ஒரு விமான விபத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து மழை வெள்ளம், எரிமலை வெடிப்பு என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்தன.
ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?
இப்போது மீண்டும் மழை பொழிந்து வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
Thanks for Your Comments