சித்தி 2ல் இருந்து ராதிகா விலகுகிராறா? தேர்தலில் போட்டியிடுவாரா?

0

சித்தி 2 மற்றும் நெடுந்தொடர்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை ராதிகா அறிவித்துள்ளார். நடிகை ராதிகா சித்தி 2 சீரியலில் இருந்து விலகி நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். 

சித்தி 2ல் இருந்து ராதிகா விலகுகிராறா?
எதனையும் எதிர்பார்க்காத அன்புக்கும் விசுவாசத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து சித்தி 2வுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா. 

முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கும் ராதிகா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராடன் நிறுவனம் தயாரித்த சித்தி நெடுந்தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால் அதில் கதாநாயகியாக நடித்த ராதிகாவும் சின்னத்திரையின் நெ.1 நடிகையாக ஆனார். 

தற்போது சித்தி 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சமீபத்தில் அறிவித்தார். 

சித்தி 2 மற்றும் மெகா தொடர்களில் இருந்து விலகுகிறேன். சன் டிவியில் என்னுடைய சிறந்த வருடங்களையும் கடின உழைப்பையும் அளித்துள்ளேன். 

என்னுடன் நடித்தவர்களிடமிருந்து சோகத்துடன் விடைபெறுகிறேன் என்று ட்வீட் செய்தார். எனினும் சித்தி 2 தொடர வேண்டும். 

ராதிகா தேர்தலில் போட்டியிடுவாரா?

கவின், வெண்பா, யாழினிக்கு வாழ்த்துகள். சித்தி 2 தொடரைத் தொடர்ந்து பாருங்கள் என்றார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவராக சரத்குமார் உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தன் கணவருடன் இணைந்து தீவிர அரசியல் ஈடுபடவுள்ளார் ராதிகா. 

சமத்துவ மக்கள் கட்சியில் முதன்மை துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு ராதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சிறிது காலத்துக்குக் கட்சிப் பணியில் முழு நேரமும் ஈடுபட முடிவெடுத்துள்ளார். 

அதனால் தான் சித்தி 2 தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இதனால் தேர்தல் வரை அரசியலில் ஈடுபடவுள்ள ராதிகா, தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது குறித்த முடிவை எடுக்கவுள்ளார். 

சின்னத்திரையில் இருந்து விலகினாலும் தற்போது சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் ராதிகா நடித்து வருகிறார்.

சினிமாவில் நடித்த போது திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் ராதிகா. 

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் தற்போது சீரியலில் இருந்து விடை பெறும் ராதிகா முழு நேர அரசியல்வாதியாக பயணிக்கப் போகிறார். 

சமத்துவ மக்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போகும் ராதிகா இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings