87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி பிரபல நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு கண்மணி இயக்கத்தில் வெளியான படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’.
இவரது இயற்பெயர் வந்தனா திவாரி. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் 2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃப்லிமி துனியா’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர் வெப் தொடர்களில் மட்டுமின்றி பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர். இந்த நிலையில் இவர் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார் .
மும்பையின் மலாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக நேற்று வந்த தகவலை தொடர்ந்து அங்கு மும்பை குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்த போது இதுவரை 87 ஆபாசப்படங்களை கெஹானா வசிஸ்த் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !
ஆபாச படம் கைதான நடிகையால் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனை குறித்து போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Thanks for Your Comments