பூனை பற்றிய சில சுவாரசியங்களை தெரிந்து கொள்ள !

0

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. 

பூனை பற்றிய சில சுவாரசியங்களை தெரிந்து கொள்ள
வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் ஒரு தூங்குமூஞ்சி. அவற்றின் வாழ்நாளில் 70 சதவீதம் தூக்கத்தில் தான் செலவிடுகின்றன.

நாம் எவ்வளவு இனிப்பு கொடுத்தாலும், பூனைகளினால் அதன் சுவையை அறிய முடியாது. அதனால் எப்போதும் பூனைகள் “ஷுகர் ஃபிரீ” தான்.

"ஒரு இடையூறு இல்லாத வீட்டில், அனைத்து வீட்டு பூனைகளும் தங்களை தங்கள் மனித உரிமையாளர்களுக்கு அடி பணிந்தவர்களாகவே பார்க்கின்றன,.

பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.

பூனைகளின் மலம் எல்லாமே நமக்கு ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் பூனை தங்கள் கழிவுகளை இன்னொரு பூனையின் கழிவுடன் வேறுபடுத்தி சொல்ல இயலும், 

மனிதர்களுக்கு தோல் வழியாக வியர்வை வெளியேறுவது போல, பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேற்றுகின்றன.

நல்ல தண்ணீர் பிரச்சனை பூனைகளுக்கு இல்லவே இல்லை. ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு.

நாய்கள் சாப்பிட்ட எலும்புகளை புதைக்கின்ற பழக்கத்தை உடையவை, பூனைகள் தன் மலத்தை புதைக்கும் பழக்கம் உடையன. 

நீருக்கு அடியில் திருமணம் செய்த சென்னை தம்பதிகள் !

வனப்பகுதிகளில் விலங்குகள் ஆதிக்கம் செலுத்த தன்னுடைய மலத்தை புதைப்பதில்லை அவை மலம் மூலம் தன்னுடைய எல்லையை தெரிவிக்கிறது, 

பூனை பற்றிய சில சுவாரசியம்

பூனைகளின் சிறுநீருக்கு இருட்டில் ஒளிரும் தன்மை உண்டு. இதனைக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தை பூனை சரியாக கணித்துக் கொள்ளும்.

உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.

தன் மகளுக்காக தாய் செய்யும் தியாகம் வைரல் வீடியோ !

மனிதர்களுக்கு இடது, வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings