மனிதர் ஒருவர் மருத்துவமனையின் படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.
பிறந்த நாள் என்றால் கேக் இல்லாமலா? ஒருவர் தங்கள் பிறந்தநாளை எவ்வளவு சிறப்பாக கொண்டாடினாலும்,
இன்ஜினுக்கு ஆயில் எதற்கு? – இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ் !
அந்த நாளில், தனது மனதுக்கு பிடித்தவர்கள் முன்னிலையில், ஒரு கேக் வெட்டினால் தான் அது அவர்களுக்கு முழு மனநிறைவை தரும்.
குழந்தைகளுக்கு பொம்மை வடிவ கேக்குகள், காதலை வெளிப்படுத்த இதய வடிவ கேக்குகள் என வித்தியாச கேக்குகளை கண்டிருப்பீர்கள்.
ஆனால் இது இன்னும் வித்தியாசமான கேக். இங்கிலாந்தை சேர்ந்த கேக் தயாரிப்பாளரான பென் கல்லன் என்பவர், மனித வடிவிலான கேக் ஒன்றை தயார் செய்துள்ளார்.
கை, கால்கள், தலை, முடி என பார்ப்பதற்கு உண்மையான மனிதன் படுத்திருப்பது போன்றே உள்ளது.
சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார்.
வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
பென், கேக் தயாரிப்பு மட்டுமன்றி சமையல் கலையிலும் பல்வேறு புதுமைகளை புகுத்துவதில் ஆர்வம் கொண்டிருப்பதால், இவ்வாறு வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
அவர் கேக்கை ஹாரர் பார் கிட்ஸ் டுவிட்டரில் பகிர, அதில் புகைப்படத்தில், கை வெட்டப்பட்டது போல் இருப்பதை பார்க்கும் போது தான், இது கேக் என அனைவருக்கும் தெரிய வருகிறது.
இன்ஜின் சீஸ் ஆவது என்றால் என்ன?
நெட்டிசன்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதனைக் கண்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
THIS IS A CAKE. pic.twitter.com/9h9pXiYHDG
— Horror4Kids (@horror4kids) February 16, 2021
Thanks for Your Comments