தஞ்சாவூரில் குழந்தையை தூக்கிச் சென்று அகழிக்குள் போட்ட குரங்குகள் !

0

நம் பகுதியிலுள்ள குரங்குக் குட்டிகளின் எடை சுமார் 200 முதல் 500 கிராம் தான் இருக்கும். குட்டிகளைக் குரங்கு தூக்கிக் கொண்டு செல்லும் போது, குட்டியைத் தாய்க் குரங்கு பிடித்திருக்காது. 

தஞ்சாவூரில் குழந்தையை தூக்கிச் சென்று அகழிக்குள் போட்ட குரங்குகள்
குட்டியே தாயை இறுக்கமாகப் பிடித்திருக்கும் என்கிறார்  வனத்துறை அதிகாரி. தஞ்சாவூரில் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரத்தில் வனத்துறை அலுவலர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளனர்.

தஞ்சாவூர், மேல அலங்கம், கோட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜா (26). பெயின்ட்டர் வேலை செய்து வருகிறார்.  

இவர் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் புவனேஸ்வரிக்கு பிப்.6-ம்தேதி மீண்டும் ஒரே பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், கடந்த 13-ம்தேதி மதியம் வீட்டிலிருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்று விட்டு வந்த போது, வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணாததால், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துள்ளார். 

அப்போது, வீட்டின் மேற்கூரையில் ஒரு குழந்தையை ஒரு குரங்கு வைத்திருந்ததாகவும், 

இதைக்கண்ட புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால், குழந்தையை அங்கேயே விட்டு விட்டு குரங்கு ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையை தூக்கி அகழிக்குள் போட்ட குரங்குகள்
மேலும், மற்றொரு குழந்தை வீட்டின் அருகில் உள்ள கோட்டை அகழியில் இறந்து கிடந்தது. 

இதனால் அந்தக் குழந்தையையும் குரங்கு தூக்கிச் சென்று குளத்தில் வீசி இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகித்தனர். 

இதையடுத்து, அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது.

இது குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் திரிந்த 20 குரங்குகளை நேற்று வனத்துறையினர் கூண்டுகளை வைத்துப் பிடித்தனர். 

அவற்றை திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் கொண்டு சென்றுவிட உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். 

இதற்கிடையே, குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் வனத்துறை அலுவலர்கள் சந்தேகங் களை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட வனத் துறை அலுவலர் இளையராஜா கூறியதாவது: 

குரங்கு குட்டிகளின் எடை

நம் பகுதியில் உள்ள குரங்கு குட்டிகளின் எடை 400 முதல் 500 கிராம் தான் இருக்கும்.

குட்டிகளை குரங்கு தூக்கி கொண்டு செல்லும் போது, குட்டியை தாய் குரங்கு பிடித்து இருக்காது. குட்டி தான் தாயை இறுக்கமாக பிடித்து இருக்கும்.

இந்நிலையில், குரங்குகள் தூக்கிச் சென்றதாக கூறப்படும் குழந்தைகளின் எடை 1.5 கிலோ இருக்கும் பட்சத்தில், 

உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !

குரங்குகள் மேற்கூரை ஓட்டின் வழியாக இறங்கி, குழந்தையை தூக்கிக் கொண்டு சுமார் 5 அடி உயர சுவர் வழியாக ஏறிச் செல்ல வாய்ப்பு இல்லை.

அப்படி குரங்குகள் தான் குழந்தையை தூக்கிச் சென்றன என்றால், குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தி யுள்ளது இவ்விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள்

இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 

இது தொடர்பாக, வனத் துறையில் மூத்தவர்களிடம் கேட்ட போது, இச்சம்பவம் அரிதான விஷயம் என கூறுகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார். 

வெள்ளையாக மாறுவதற்கு இதோ சில எளிய வழிகள் !

இது குறித்து போலீஸார் கூறும் போது, ''இந்த விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவதால், விசாரணையை பல்வேறு கோணத்தில் நடத்தி வருகிறோம்'' என்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings