இது எடப்பாடி தரப்பை மேலும் அதிர வைத்து வரும் செய்தி. சின்னம்மாவை வரவேற்க அவரே நேரடியாக வர போகிறார்" என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்லும் ஓடிடிவி தினகரன்.
அதனாலேயே, யாரும் சசிகலாவுக்கு யாராவது ஆதரவு தருகிறார்களா என்பதை கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் ஆங்காங்கே சசிகலாவுக்கான ஆதரவுகள் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
மேலும் டெல்லியில் முதல்வர் பேட்டி தரும் போது, சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று சொன்ன நிலையில்,
அதை பற்றியும் இன்று வரை ஓபிஎஸ் பேசாமல் இருப்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
இதை பற்றி அன்றைய மதியமே 2 அமைச்சர்கள் கொந்தளித்த நிலையில், அன்று இரவே கேபி முனுசாமி வேறு வகையாக பேட்டி தந்துள்ளார்.
மன்னிப்பு கடிதம் தந்தால், டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம் என்றார். இந்த முரண்பாடு அதிமுகவில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது தான பத்திரம் என்றால் என்ன?
ஆனால், ஓபிஎஸ் வாயே திறக்காமல் இருக்கிறார். சசிகலா விடுதலை ஆன அன்று ஒரு விளம்பரம் தந்திருக்கிறார்.
எதற்காக இந்த விளம்பரம், குறிப்பாக அன்றைய நாளில் தரப்பட்டது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
அடுத்ததாக, சசிகலாவை வரவேற்ற நிர்வாகியை கட்சியை விட்டே தூக்கிய போது, அதில் கையெழுத்து போட்டவர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான்.
இந்த சூழலில் தான், தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசும் போது, நீங்க வேணும்னா பாருங்க, பன்னீர்செல்வமே சென்னையின் எல்லையில் நின்று சின்னம்மாவை வரவேற்பார் என்றாராம்.
எப்போதுமே கவர்ச்சியை விரும்பும் தொகுப்பாளினி அஞ்சனா !
தினகரன் உண்மையிலேயே இப்படி சொன்னாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒரு வேளை அப்படியே சொல்லி இருந்தாலும், பன்னீரின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன என்றும்,
இனரீதியான ஒற்றுமை, தென் மண்டல செல்வாக்கு, போன்றவைகளும் மீண்டும் இவர்களின் இணக்கத்திற்கு அடித்தளமாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
Thanks for Your Comments