மேடையில் மாப்பிள்ளையை ஓரங்கட்டி விட்டு, கல்யாண பெண்ணின் கன்னத்தில் கை வைத்தாரே போட்டோ கிராபர், அது ஏன் தெரியுமா? அது சம்பந்தமாக தான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல, கேமராமேன்கள், போட்டோ கிராபர்களும், தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், இது போன்ற திருமண விழாக்களில் "அவுட்டிங்" போட்டோக்களையும் அதிக அளவில் எடுத்து வருகின்றனர்.
‘முலை வரிச்சட்டம்’ பற்றி தெரியுமா?
வழக்கமான கல்யாணங்களில் போட்டோக்களை எடுத்து வந்த நிலையில், இளைஞர்கள் இப்போது இது மாதிரியான புதுமைகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.
அதற்காக ஒரு எல்லையின்றி மணமக்கள் போஸ் கொடுப்பது தான் வேதனையாகவே மாறி வருகிறது.
இப்போதும் 2 நாளைக்கு முன்பு ஒரு கல்யாண வீடியோ வைரலானது. மணமக்கள் மேடையில் அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அப்போது போட்டோகிராபர், அங்கிருந்த மாப்பிள்ளையை ஒரு ஓரமாக தள்ளி விட்டு, கல்யாண பெண்ணையே குறி வைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.
ஓரத்தில் ஒதுங்கி நின்ற மாப்பிள்ளை பரிதாபமாக நிற்பதும், மணப்பெண் சிரித்து கொண்டே போஸ் கொடுப்பதும், அந்த போட்டோ கிராபர் கல்யாண பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததும் என மண்டபமே அதிர்ந்து விட்டது.
PF என்றால் என்ன? தொிந்து கொள்ள
இதை பார்த்ததும் மாப்பிள்ளை உச்சக்கட்ட டென்ஷனுக்கு போய் விட்டார். அதே மேடையில் வைத்தே போட்டோகிராபரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
உடனடியாக அந்த மண்டபத்தை விட்டு வெளியே போக சொன்னார். ஆனால், அந்த கல்யாண பெண்ணோ, இதை யெல்லாம் பார்த்து தரையில் விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி படு வைரலானது. ஆனால், இந்த வீடியோ குறித்த உண்மை செய்தி வெளியாகி உள்ளது.
"டார்லிங் பியார் ஜும்தா நஹி" என்ற படத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதில் ஒரு சீன் தான் இந்த மண்டபத்தில் எடுக்கப் பட்டுள்ளது. நிஜமாகவே இது கல்யாணம் இல்லை.
பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !
அந்த ஷூட்டிங்கில் நடந்த காட்சி இது என்று அந்த நடிகையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அத்துடன் படத்தின் வேறு சில காட்சிகளையும் ஷேர் செய்துள்ளார்.
Thanks for Your Comments