விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து சர்வதேச கவனத்தைக் கட்டியெழுப்பியவர் பாப் பாடகி ரிஹானா.
இவருக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின், கோலி, அக்ஷய் குமார் என அனைவரும் ட்விட்டரில் பதிவிட்டனர். கடந்த சில நாட்களாகத் தான் ரிஹானா பற்றிய பேச்சு ஓய்ந்தது.
ஆனால், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் அதற்குக் காரணம்.
இன்று அவர் ட்விட்டரில், பாப்கான் மியூஸிக் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உள்ளாட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனுடன் சர்ச்சைக்குரிய அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. மேலாடை அணியாமல் ரிஹானா மார்புகளைக் கையால் மறைத்து நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார்.
புட் டெலிவரி செய்யும் மாற்று திறனாளி - நம்பிக்கையின் உச்சம் !
பாஜக உடனடியாக ரிஹானாவின் இந்த நடவடிக்கையை கண்டித்ததுடன், இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரிக்கும் ட்வீட் தொடர்பாக காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் விமர்சித்துள்ளது.
ரிஹானா அத்தகைய புகைப்படத்தைப் பகிர்ந்ததன் பின்னணியில் என்ன இருக்க முடியும்? அவர் ஒரு சதித்திட்டத்தின்படி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் இன்னும் அவருக்கு ஆதரவளிக்குமா?” என பாஜக தலைவர் ராம் கதம் தெரிவித்தார்.
when @PopcaanMusic said “me nuh wan ya wear no lingerie tonight fa me girl” @SavageXFenty pic.twitter.com/bnrtCZT7FB
— Rihanna (@rihanna) February 15, 2021
“சிவசேனா ஒரு காலத்தில் சிறிய விஷயங்களுக்கு கூட எதிர்ப்புத் தெரிவித்தது.
இப்போது இந்து கடவுளையும் தெய்வங்களையும் அவமதிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் இருந்த போதிலும் அது அமைதியாக இருக்கிறது.
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
சிவசேனா இப்போது அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது.” என்று ராம் கதம் கூறினார்.
இதற்கிடையே ரிஹானாவின் புகைப்படம் குறித்து ட்விட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டரில் 100 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்ட 32 வயதான பாடகி ரிஹானா,
சி.என்.என் செய்தி கட்டுரையைப் பகிர்ந்து இந்தியாவில் நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து, அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
It's appalling to see how @Rihanna shamefully mocks our beloved Hindu God #Ganesha. This exposes how #Rihanna has no idea or respect for Indian culture, tradition and our issues here. Hopefully, at least now @RahulGandhi and other Congress leaders will stop taking help from her https://t.co/7zUpnO05GL
— Ram Kadam - राम कदम (@ramkadam) February 16, 2021
Thanks for Your Comments