தன் மகளுக்காக தாய் செய்யும் தியாகம் வைரல் வீடியோ !

1 minute read
0

உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன.. அவைகளில் பல வீடியோக்களாகவும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.. அவைகளில் சில மகிழ்ச்சியை தரும்.

மகளுக்காக தாயும் மொட்டை அடித்து கொள்ளும் வீடியோ
சில வீடியோக்கள் பரிதாபத்தை தரும்.. சில வீடியோக்கள் கோபத்தை உண்டு பண்ணும்.. இப்போது ஒரு வீடியோ வைரலாகிறது.. இதை நெகிழ்ச்சி என்பதா? பாசத்தின் பரிமாணம் என்பதா? 

ஆனால் இதயத்தை நெகிழ செய்யும் வீடியோவாக இந்த வீடியோ அமைந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவை சேர்ந்தவர் லூசியானா ரெபல்லோ.. இவருக்கு புற்றுநோயை இருக்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு முட்டை சென்னா செய்வது எப்படி?

அந்த கொடிய நோயை எதிர்த்து கடுமையாக போராடி கொண்டிருக்கிறார். இவர் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார். 

அதில், லூசியானாவுக்கு அவரது அம்மா தலையை மொட்டை மொட்டையடித்து கொண்டிருக்கிறார். 

அப்போது திடீரென லூசியானாவின் அம்மாவும், தன்னிடமிருந்த முடிவெட்டும் கருவியால், தன்னுடைய தலையையும் மொட்டையடிக்க ஆரம்பித்து விடுகிறார்.

இதை லூசியானா கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை.. அதுவரை சிரித்து கொண்டும், கண்ணடித்து கொண்டும் உட்கார்ந்திருந்தவர், 

தன்னுடைய அம்மாவும் மொட்டை அடித்து கொள்வதை பார்த்து அதிர்ந்து போய் விட்டார். இப்போது தாயும் - மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்கிறார்கள். 2 பேரின் கண்களும் கலங்குகின்றன. 

பிறகு டக்கென லூசியானாவின் தலையில் ஒரு பாசமான முத்தத்தை அவரது அம்மா பதிக்கிறார். ஒரு தாயின் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை" என்று பதிவிடப்பட்டுள்ளது. 

வெல்டிங் வேலை... ஒரு நாளைக்கு சம்பளம் 100 ரூபாய்.. குக் வித் கோமாளி புகழ் !

இதை பார்க்கும் ட்விட்டர்வாசிகள் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மகளுக்காக தாய் செய்யும் தியாகம்

அந்த வீடியோவில் தாய் முடி வெட்டும் கருவியை கொண்டு தனது மகளுக்கு முடியை வெட்டுகிறார். 

இந்த செயல்ப்பாட்டின் நடுவே அவர் தனது முடியையும் வெட்டிக் கொண்டு பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நீருக்கு அடியில் திருமணம் செய்த சென்னை தம்பதிகள் !

இந்த இருவரும் முழுவதுமாக முடியை வெட்டுவதுடன் இந்த வீடியோ முடிகிறது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் பார்த்துள்ளனர். 

பலரும் தனது மகளை ஆதரிப்பதற்காக அந்த தாய் செய்த சக்தி வாய்ந்த செய்கையை பாராட்டுகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்சமயம் மிகவும் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 10, April 2025
Privacy and cookie settings