சமந்தா அக்கினேனி (Samantha Akkineni, ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் மாடலிங் கலைஞரும் ஆவார்.
சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு. இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும்,
பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர்.
எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.
Thanks for Your Comments