சென்னையில் சசிகலா அமைச்சர்கள் பேரணி !

0

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் போது குறைந்த பட்சம் பத்து அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேரணியாக நடந்து வர வேண்டும் என்று சசிகலா வியூகம் வகுத்து காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலா அமைச்சர்கள் பேரணி !
சிறையில் இருந்து வெளியே வருவது போல் இருக்க கூடாது என்பதற்காகவே சசிகலா உடல் நலம் குன்றியது போல் நாடகம் போட்டதாக சில பேச்சுகள் உண்டு. 

சிறையில் இருந்து தமிழகம் திரும்பினால் அது தன்னுடைய இமேஜை பாதிக்கும் என்பதால் தான் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்னர் சசிகலா மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆனதாகவும் கூறப்பட்டது. 

அதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனையில் இருந்தபடி சில அரசியல் காய் நகர்த்தல்களுக்கு சசிகலா திட்டமிட்டதாகவும் ரிலீஸ் ஆகும் போது கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்ட வேண்டும் என்று அவர் நினைத்ததாகவும் கூட சொல்லப்பட்ட துண்டு.

ஆனால் சசிகலா சிறைக்காவலில் மருத்துவமனையில் இருந்த போது அவரால் அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லை. 

இதனால் தான் ரிலீசுக்கு பிறகும் கூட அதே அரசு மருத்துவமனையில் சசிகலா இருந்ததாக சொல்கிறார்கள். இந்த முறை சிறைக் காவல் இல்லாத நிலையிலும் அரசியல் ரீதியாக எவ்வித தாக்கத்தையும் சசிகலாவால் ஏற்படுத்த முடியவில்லை.  

முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !

தன்னை காண அதிமுக முக்கிய அமைச்சர்கள் தொடங்கி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரை பலரும் படை எடுப்பார்கள் என்றும் சசிகலா காத்திருந்தார். 

ஆனால் தினகரன் நடத்தும் அமமுக கட்சியினர் கூட சசிகலாவை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளுமாறு நிர்வாகம் நெருக்கடி கொடுத்த நிலையில்,  வேறு வழியே இல்லாமல் அங்கிருந்து சசிகலா வெளியேறியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போதும் கூட சில நூறு கட்சிக்காரர்கள் மட்டுமே அங்கிருந்தனர். 

இதனால் நேரடியாக தமிழகம் திரும்ப சசிகலா விரும்பவில்லை. எனவே தான் பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டுக்கு சசிகலா நேரடியாக திரும்பினார். 

நர மாமிசம் உண்ட மனிதர்கள்

அங்கிருந்தபடி அதிமுகவில் தன்னால் வளர்ந்தவர்களை தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருவதாக கூறுகிறார்கள்.

சசிகலா தன்னிடம் கட்சிக்காரர்கள் தாங்களாகவே வருவார்கள் என்று எதிர் பார்த்திருந்த நிலையில் அது நடக்காத காரணத்தினால் 

முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு சசிகலாவே நலம் விசாரிப்பதாக கூறுகிறார்கள். இதற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை என்கிறார்கள். 

அதே சமயம் சசிகலா தான் சென்னை திரும்பும் போது குறைந்தபட்சம் தன்னுடன் 10 அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் ஊர்வலமாக நடந்து வர வேண்டும் என்று எதிர் பார்ப்பதாக கூறுகிறார்கள். 

மேலும் சென்னை எல்லையில் தனக்கு அதிமுகவினர் திரண்டு வரவேற்பளிக்கவும் ஏற்பாடுகளை செய்யுமாறு சசிகலா கூறியிருப்பதாக சொல்கிறார்கள். 

ஆனால் இது குறித்து முதலிலேயே மோப்பம் பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். 

அதோடு அமைச்சர்கள் சிலர் நேரடியாகவே எடப்பாடியை தொடர்பு கொண்டு சசிகலா தங்களிடம் பேசிய தகவல்களை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

மனைவி மகிழ்ச்சியாக இருந்தால்

இவற்றை எல்லாம் மனதில் வைத்து சசிகலாவை சமாளிப்பதற்கான வியூகத்துடன் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகவும் கூறுகிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings