சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா.
பின்னர் கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டு, 31 அன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார்.
மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். கொரோனாவில் இருந்து குணமாகி விட்டாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி மருத்துவர்கள் சசிகலாவை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ரிசார்ட்ஸ் 127 ஏக்கர் கொண்டது என்று கூறுகிறார்கள். அந்த ரிசார்ட்ஸில் இரண்டு அரை எடுத்து தங்கி உள்ளார்.
ஒரு அறையின் ஒரு நாள் வாடகை மட்டும் ஒன்னே கால் லட்சம், இரண்டு அறையின் வாடகை இரண்டரை லட்சம் என்றும் கூறப்படுகிறது.
அவர் அங்கு 30 நாட்களுக்கு தங்க உள்ளார் என்றும் அங்கு அவர் தங்குவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறுகிறார்கள்.
இத்தகைய ரிசார்ட்ஸில் அவர் தங்கி விட்டு பிப்ரவரி 3-ம் தேதி அல்லது 5-ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thanks for Your Comments