உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆசனங்கள் !

0

இன்று சுட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உயரத்துகேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க
ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரி க்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது.

இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வர வைக்கிறது.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?
வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்து விடுகிறது. இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இரண்டு வகை ஆசனங்கள் உதவுகின்றன. அவை..

திரிகோணாசனம்

திரிகோணாசனம்

இரண்டு கால்களையும் அகட்டி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருபக்கமும் நீட்டிக் கொள்ளவும்.

வலது கையால் வலது பாதத்தை உடலை வளைத்துத் தொட வேண்டும். அப்போது, இடது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும். 

டிக்டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகம் ஆகும் த்ரில் படம் !

இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர், இதேபோல இடது கையால் இடது பாதத்தைத் தொட வேண்டும். 

அப்போது, வலது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும்.  இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

தினமும் காலையில் இந்த ஆசனத்தைச் செய்து வந்தால், இடுப்புப் பகுதியில் உள்ள ஊளைச்சதை குறையும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

குப்புறப் படுத்துக் கொண்டு இரு கால்களையும் அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இடுப்புப் பகுதி வரை மேல் நோக்கி முடிந்த வரை உடலை வளைக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

டயட்டால் வரும் ஆபத்துகள் தெரியுமா? 

இந்த ஆசனத்தைச் செய்யும் போது அடிவயிற்றுத் தசைகள் மேல் நோக்கி இழுக்கப்படுகின்றன. இந்த ஆசனத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால், அடி வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

நவஹ குக்குலு மாத்திரை

நவஹ குக்குலு மாத்திரை

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படுவது 'நவஹ குக்குலு' மாத்திரை.

திரிபலா, சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், தாந்திரிக்காய், வாய்விடங்கம், கோரைக் கிழங்கு, கொடிவேலி ஆகியவற்றுடன் 

ஆஸ்துமா அலர்ட்

குக்குலு மரத்தின் பிசினைக் கலந்து தயாரிக்கப்படுவது, நவஹ குக்குலு மாத்திரை. இதனை தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடலாம். 

சர்க்கரைநோய், இதய நோய்களுக்கு அலோபதி மருந்து சாப்பிடுபவர்களும் இதனைச் சாப்பிடலாம். இதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings