விப்பிள் நோய் என்பதும் அதன் அறிகுறிகளையும் காணலாம் !

0

இந்த விப்பிள் நோய் (Whipple's disease) 1907 ஆம் ஆண்டு பரவியது. இது நமது உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சுவதற்கான மெட்டா பாலிச செயலுக்கு இடையூறு அளிக்கிறது. 

விப்பிள் நோய் என்பதும் அதன் அறிகுறிகளையும் காணலாம் !
மேலும் இது உடல் உறுப்புகளான இதயம், மூட்டு வலிகள், மூளை, கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இது நமது குடலியக்கத்தைத் தான் முதலில் தாக்கும்.

இந்த நோய் பொதுவாக ஆண்களை அதிகம் தாக்கக் கூடியது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், அடி வயிற்றில் வலி போன்றவை ஏற்படும். 

மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !

சில சமயங்களில் நோயாளிகளுக்கு ஆன்டி -பாயாடிக் கொடுத்தே தொற்றை சரி செய்து விடலாம். இல்லா விட்டால் நீண்ட நாள் சிகச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 

விப்பிள் நோய் ஆண்களில் ஏற்படும் விழுக்காடு அதிகமாக உள்ளது. நோயாளிகளில் 87% ஆண்களாவர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

எடை குறைதல், வயிற்றோட்டம், மூட்டுவலி முதலியன பொதுவான முதன்மை அறிகுறிகளாகும்.

குழந்தைக்கும் பரவும்

விப்பிள் நோய் குழந்தைக்கும் பரவும்

இந்த விப்பிள் நோய் (Whipple's disease)  துரோபெரைமா விப்ளெய் என்ற அரியவகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோயாகும். இது நமது மூட்டு பகுதிகள் மற்றும் சீரண மண்டலத்தை பாதிப்படையச் செய்து விடும். 

இந்த பாக்டீரியா தொற்று குடலில் உணவை சிதைப்பதற்கான செயலை குறைப்பதோடு ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் செயலையும் தடுத்து விடும்.

டயடினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் !

அதே மாதிரி இந்த விப்பிள் நோய் நமது உடல் உறுப்புகளான இதயம், மூளை மற்றும் கண்களை பாதிக்க கூடியது. 

இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் அம்மாவிடம் இருந்து கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக் கூடியது. எனவே சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.

அறிகுறிகள்

விப்பிள் நோய் அறிகுறிகள்

உடல் எடை குறைப்பு, வயிற்று வலி, அனிமியா, சோர்வு, சூரிய ஒளியால் சீக்கிரமே தோல் கருப்பாகுதல், எண்டோடார்டிடிஸ், மூச்சு விட சிரமம், 

இதயத்தில் அழற்சி ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைபடுதல், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அறிகுறிகள், இன்ஸோமினியா, டிமென்ஷியா, முகத்தில் உணர்வின்மை, 

கண்களில் பிரச்சினை, காது கேட்காமல் போகுதல், நினைவாற்றல் இழப்பு, ஒரு குறிப்பிட்ட மூட்டில் உருவாகும் மூட்டுவலி வேறு மூட்டுகளுக்கு இடம் பெயரும். 

ஆணுக்கு தைராய்டு வருமா? அறிகுறிகள் என்ன?

எடுத்துக்காட்டாக, தோள் மூட்டில் வலி என்று தெரிவிக்கும் நோயாளி மறுதடவை முழங்காலில் வலி என்று தெரிவிக்கக்கூடும்.

ஞாபக மறதி ஏற்படல் தாமதித்து ஏற்படும் அறிகுறியாகும், இது உண்டாவது நோய் குணமாகும் தன்மை குறைவதைக் காட்டுகின்றது

காரணங்கள்

விப்பிள் நோய் காரணங்கள்

இந்த விப்பிள் நோய் துரோபெரைமா விப்ளெய் என்ற பாக்டீரியால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா நமது சிறுகுடலின் சுவர்களை பாதித்து அங்கே கட்டிகளை உருவாக்குகிறது. 

இது சிறுகுடலின் வளைவு பகுதியையும் பாதிக்கிறது. இந்த பாக்டீரியா எப்படி மனிதரை தொற்றுகிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

யாரை பாதிக்கும்?

விப்பிள் நோய் யாரை பாதிக்கும்?

இந்த நோய் விவசாயிகள், வெளிப்புற வேலை செய்பவர்கள், மண்ணில் இறங்கி வேலை செய்பவர்கள், 

கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !

தேங்கி கிடந்த தண்ணீர் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு வருகிறது. இது ஒருத்தரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது அரிதானது தான்.

கண்டறிதல்

விப்பிள் நோயை கண்டறிதல்

இரத்த பரிசோதனை, எண்டோஸ்கோபி, உடல் நல பரிசோதனைகள் மருந்து மற்றும் குடும்ப வரலாறு

அதே மாதிரி மருத்துவர் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கலாமா என்பதை பரிசோதித்து கொள்வார்.

செலியக் நோய், அழற்சிக்குரிய ருமாட்டிக் நோய், நரம்பியல் நோய், உள் அடிவயிற்று லிம்போமா, எய்ட்ஸ் உடைய மக்களுக்கு ஏற்படும் தொற்று முதலியன.

பயாப்ஸி

பயாப்ஸி

சிறுகுடலின் சுவரிலிருந்து சிறுதளவு திசுக்களை எடுத்து பரிசோதனை செய்கின்றனர். 

இந்த திசுக்களை மைக்ரோஸ்கோப் வழியாக ஆய்வு செய்து பாக்டீரியா தாக்கம் இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை பார்க்கிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings