பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய காரிலேயே பயணித்தார். ஆனால், தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அவர் அதிமுக நிர்வாகி என்பதால், அந்தக் காரில் அக்கட்சியின் கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்பதால், காரில் கட்சிக் கொடியை பறக்கவிட்டு சசிகலா சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும் எப்படி ?
ஆனால், சசிகலாவுக்கு கார் கொடுத்த தட்சிணாமூர்த்தியை அப்போதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
இதற்கான உத்தரவை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் பிறப்பித்திருந்தனர்.
கர்நாடக எல்லையான ஜூஜூவாடிக்கு அருகே வந்த போது தான், தட்சிணாமூர்த்தியின் காருக்கு சசிகலா மாறி இருக்கிறார்.
வயாகரா அதற்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம் !
கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தாராம்.
இதற்கான ஆதாரத்தையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார். ஆனால், அது சம்பந்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை போலும்.
கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?
இந்த கடுப்பில் தான், சசிகலாவை வரவேற்க சென்று, அதற்கு பிறகு பரபரப்பாகி விட்டார் என்கிறார்கள்.
இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது என்றாலும், இவரை போலவே அதிருப்தியில் அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீச அமமுக தயாராகி வருகிறதாம்.
Thanks for Your Comments