கடத்தல் மன்னனின் இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் பின்னணி !

0

மெக்ஸிகன் போதைப்பொருள்👈 கடத்தல் தாதாவான 'எல் சாபோ' கஸ்மனின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

கடத்தல் மன்னனின் இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் பின்னணி !
மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாகுயின் எல்சாபோ கஸ்மன். ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரரான இவர், 

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வழியாக கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தார். 

கடந்த 2014-ம் ஆண்டில் எல்சாபோ👈 கைது செய்யப்பட்டு, அல்டிபிலானே சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர் அவர் மெக்ஸிகோவில் இருக்கும் அதிஉயர் பாதுகாப்புச் சிறையான அல்டிப்ளானோவில் இருந்து 2015ஆம் ஆண்டில் தப்பித்தார். 

அம்மாடியோ.. புதிய விதி வந்த பின் வசூலான அபராத தொகை இவ்வளவா - கண்ண கட்டுதே !

அவரது மகன்கள் அச்சிறைக்கு அருகில் இருக்கும் இடத்தை வாங்கினர். ஒரு ஜிபிஎஸ் கைக்கடிகாரம் எப்படியோ சிறை அதிகாரிகளுக்குத் தெரியாத வண்ணம் சிறைக்குள் கடத்தப்பட்டது.

எல் சாபோ இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொண்ட பின், சிறைக்கு அருகில் இருக்கும் அவரது மகன்கள் வாங்கிய இடத்தில் இருந்து சிறைக்கு சுரங்கம் தோண்டினர். 

அச்சுரங்கம் வழியாக, ஒரு சிறிய மோட்டர் சைக்கிள் மூலம் தப்பினார் எல் சாப்போ. அமெரிக்க சிறைத்துறை👈 பாதுகாப்பு வரலாற்றில் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. 

கடத்தல் மன்னனின் இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் பின்னணி !

இதனால் அதிகாரிகளுக்கு பெருத்த அவமானம்👈 ஏற்பட்டது. மெக்சிகோ நாட்டின் கடற்படை வீரர்கள், 58 வயது எல்சாபோ கஸ்மனுக்கு பல மாதமாக வலை வீசித் தேடி வந்தனர். 

பின்னர் அவர் தங்கியிருந்த இடத்தை கண்டறிந்தனர் போலீஸார். சினாலாவோ மாநிலத்தில் உள்ள லாஸ் மோச்சிஸ் நகரில் ஒரு ஹோட்டலில் எல்சாபோ கஸ்மன் தங்கியிருந்தான் என்று தெரிவிக்கப்பட்டது. 

பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மீண்டும் அவரை கைது செய்தனர். இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

பின்பு மீண்டும் அவர் சிறையில்👈 இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். தற்போது எல்சாபோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், எல் சாப்போவை அமெரிக்க சிறைக்கு கொண்டு வரும் முன், அவரை மீண்டும் தப்பிக்க👈 வைக்கும் முயற்சியில், அவரது மனைவி எம்மா ஐஸ்புரோ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராகி மாவு அல்வா செய்முறை !

இந்நிலையில் தான், எல் சாபோவின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 

கடத்தல் மன்னனின் இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் பின்னணி !
கணவரின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைதாகி உள்ளார். 

எல் சாபோவின் இரு எஸ்கேப் முயற்சியிலும் எம்மா கொரோனெலுக்கும்👈 தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எம்மா ஐஸ்புரோ, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார். எல் சாப்போவுடன் இவருக்கு இரண்டு பிள்ளைகள் (இரட்டையர்கள்) உள்ளனர்.

மேலும், அமெரிக்காவில்👈 சட்ட விரோதமாக இறக்குமதி செய்து ஹெராயின், கொகேய்ன், மரிஜுவானா மற்றும் methamphetamine போன்றவற்றை 

விநியோகிக்க திட்டம் தீட்டியதாக கைது செய்யப் பட்டிருக்கும் எம்மா கொரோனெல் வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

எம்மாவின் இந்த கைது அமெரிக்க காவல்துறையின் அதி முக்கிய வழக்காக கருதப்படுகிறது. 

கடத்தல் மன்னனின் இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் பின்னணி !

மேலும் இந்த கைது நடவடிக்கை மூலம், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் விரிசல் தீவிரம் அடைவதாக அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் சினாலோ என்கிற மாகாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் எல் சாப்போ. 

உளுந்து அல்வா செய்முறை !

இவரது போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் பல்கிப் பெருகியதால், 2009ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பில்லியனர்கள் பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு, 

உலகின் 701-வது மிகப் பெரிய பணக்காரராக எல் சாப்போ இடம் பிடித்திருந்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings