500 க்கும் மேற்பட்ட அறிவிப்புகள்... திமுக தேர்தல்அறிக்கை !

0

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம், அரசு பணியில் 75 சதவீதம் தமிழர்களுக்கு என சட்டம்,

500 க்கும் மேற்பட்ட அறிவிப்புகள்... திமுக தேர்தல்அறிக்கை !
பள்ளி மாணவர்களுக்கு பால் என்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

கீட்டோ டயட்க்கு முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்க விளைவுகள் !

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப் பட்டுள்ளனர். 

இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 

திமுக தலைமை அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. 

அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு : 

திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். 

முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். 

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும். 

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 

பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது. 

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரிசி கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் வழங்கப்படும். 

ஜூன் 3ம் தேதி முதல் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் முதல் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும். 

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும். ஜூன் 3ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். 

பயணிகள் பேருந்துகள் அனைத்திலும் ஜிபிஎஸ் வசதி அமைக்கப்படும். பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும். 

நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும். 

அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் ஆக்கப்படும். 

சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். 

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் கொண்டு வரப்படும். 

நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். 

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். 

அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

முக்கியமான மலைக் கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும். கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும். 

இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும். 

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், 

மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும். 

ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணகவகம் அமைக்கப்படும். நடைபாதை வாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும். 

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும். 

கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும். தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும். 

இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும். 

கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். 

பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, 3 லட்சம் என்பது 5 லட்சம் ஆக்கப்படும். 

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings