அழகின் அடிப்படை ஆரோக்கியம்; ஆரோக்கியத்தின் அடிப்படை குளியல். குளிர் காலத்தில் பலருக்கு குளியல் என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.
வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம். குளியல் சரும துவாரங்களை அடைத்துள்ள, நச்சுப் பொருட்களை விரட்டி, புத்துணர்வை அளிக்க கூடியது.
சரி அப்படி குளிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டோம். இப்போது எத்தனை நாளைக்கு நம்மால் குளிக்காமல் இருக்க முடியும்.
அழுக்கு மனிதர்?
தினமும் குளிப்பதை முக்கிய வேலையாக வைத்திருக்கும் நம்மாட்கள் பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
இவர் ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் மோசேவை போல இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
70 ஆண்டுகள்
ஏறக்குறைய 70 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லை. அவர் குளித்தால் அதனால் அவருக்கு நோய் ஏற்படும் என அவர் நம்புகிறார் எனவே தான் அவர் குளிப்பதே இல்லை.
அழுகிய இறைச்சிகள்
அதில் அதிகமாக முள்ளம் பன்றிகளை உண்கிறார். மேலும் அவர் புகை பழக்கத்தையும் விரும்புபவராக இருக்கிறார்.
ஆனால் அவர் புகைப்பதற்கு புகையிழையை பயன்படுத்துவ தில்லை. அதற்கு பதிலாக தனது துருபிடித்த புகைக்கும் குழாயில் விலங்குகளின் மலத்தை இட்டு அதை அவர் புகைக்கிறார்.
ஃபிளாஷ்பேக்
டெஹ்ரான் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் கருத்துப்படி ஹாஜி தனது இளமை பருவத்தில் வாழ்க்கையில் சில உணர்ச்சிகரமான விஷயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதன் பிறகு தனிமைப் படுத்தப்பட்ட அவர் இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ துவங்கினார்.
பூமி எவ்வளவு விசித்திரங்கள் நிறைந்ததாக உள்ளதோ அதே அளவு மனித வாழ்க்கையும் விசித்திரம் நிறைந்ததாக இருப்பதை காண முடிகிறது.
குளிப்பதை நிறுத்தினால்
எனவே நீங்கள் டியோடரண்ட் (வாசனை திரவியங்கள்) மற்றும் சோப்புகளைப் பயன்படுத்தா விட்டால் பெரிதாக துர்நாற்றம் வீசுவதில்லை.
உங்கள் தோலில் இருந்து அத்தனை அதிகமாக கிரீஸைப் போன்ற கருப்பு நிற அழுக்கு வருவதில்லை" என்கிறார் மருத்துவர் ஹாம்பிளின்.
யேல் பல்கலைக்கழகத்தின் பப்ளிக் ஹெல்த் ஸ்கூலில் பேராசிரியராகவும், தடுப்பு மருத்துவ நிபுணராகவும் இருக்கிறார்.
உடலில் துர்நாற்றம்
நமது சருமத்தில் வாழும் பாக்டீரியாக்களினால் தான் நமது உடலில் துர்நாற்றம் வீசுகிறது. நம் உடலில் உருவாகும் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்புகளை
உணவாகக் கொண்டு இந்த பாக்டீரியாக்கள் நம் தோலில் வாழ்கின்றன என்கிறார் இந்த அமெரிக்க கல்வியாளர்.
ஒவ்வொரு நாளும் நம் சருமத்தின் மீதும், கூந்தலின் மீதும் பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம்,
நம் சருமத்தில் உள்ள எண்ணெய்க்கும் பாக்டீரியாவுக்கும் இடையில் ஒரு சமநிலை பிரச்சனை ஏற்படுவதாக ஹாம்பிளின் வாதிடுகிறார்.
நீங்கள் அதிகம் குளிக்கும் போது, உடலமைப்புச் சூழலை அழிக்கிறீர்கள்" என தி அட்லாண்டிக் பத்திரிகையில் 2016-ல் எழுதியிருந்தார்.
துர்நாற்றத்தை நிறுத்துகிறது
குளிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு ஒழுங்குமுறை செயல்பாடு நம் உடலில் தூண்டப்படுகிறது, அதில் உடலமைப்பு சூழல் ஒரு ஸ்திரமான நிலையை அடைகிறது.
அது நம் உடலில் இருந்து வீசும் துர்நாற்றத்தை நிறுத்துகிறது" என மருத்துவர் கூறுகிறார். உங்கள் உடலில் இருந்து பன்னீர் வாசனை எல்லாம் வராது.
ஆனால் உங்கள் உடலில் இருந்து மோசமான நாற்றமும் வராது. நீங்கள் மனித வாசனையில் இருப்பீர்கள் என்கிறார்.
Amou Haji is the world's dirtiest man because he hasn't bathed in 60 years . He eats rotten eggs and smoke faeces out of a pipe. He believes that cleanliness brings him sick. #facts #mrfacts #dirty #weirdos pic.twitter.com/5kt20kfmZL
— MrFacts (@mrfactsofficial) December 19, 2020
Thanks for Your Comments