பொதுவாகவே காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் இல்லற வாழ்க்கை பற்றி புரிந்து கொள்ள
அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் அவர்களை மாற்றி விடும். அதே போல் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால் கூடுதலாகவே நாட்கள் தேவைப்படும் ஒருவரை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள.
ஆனால் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால், உலகம் வேகமாக இயங்குவது போல, திருமணம் செய்த கையோடு விவாகரத்தையும் பெற்றுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் (வயது 57).
2019 ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தார்..திருமணம் செய்த நான்கே நாட்களில் காதலியிடம் இருந்து விவாகரத்து பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது 32 வது வயதில் லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
ஆனாக் தற்போது தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
லாஸ் வேகாஸில் உள்ள வின் ஹோட்டலில் பிப்ரவரி 16-ம் தேதி நடந்த இந்த திருமணத்தை நடிகரின் பிரதிநிதி ஷானன் பார் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
இத்திருமணம் ஒரு சிறிய மற்றும் நெருக்கமான விழா என்று கூறப்படுகிறது. "மணமகனின் மறைந்த தந்தையின் பிறந்த நாளை கெளரவிப்பதற்காக திருமண தேதி தேர்வு செய்யப்பட்டது.
ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாதவர் - 400 கார்களுக்கு உரிமையாளர் !
அவர்கள் பாரம்பரிய கத்தோலிக் மற்றும் ஷின்டோ சபதங்களை வால்ட் விட்மேன் கவிதைகளுடன் பரிமாறிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் ஒரு சிறிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
26 வயதான கியோட்டோவைச் சேர்ந்த மணப்பெண் கிமோனா கையால் தயாரிக்கப்பட்ட ஜப்பானிய உடையை அணிந்திருந்தார். நிக்கோலா கேஜ் டாம் ஃபோர்டு டக்ஸ் உடையை அணிந்திருந்தார்.
எரிகா குக்கியுடன் மார்ச் 2019-ல் நான்கு நாட்கள், நடிகை பாட்ரிசியா அர்குவேட்டுடன் 1995 முதல் 2001 வரை, லிசா மேரி பிரெஸ்லியுடன் 2002 முதல் 2004 வரை, ஆலிஸ் கிம்முடன் 2004 முதல் 2016 வரை திருமணம் செய்து வாழ்ந்தார் நிக்கோலஸ்.
Thanks for Your Comments