விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீசான மாஸ்டர் படம் 50 வது நாளை நெருங்கி வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் இன்ட்ரோ பாடலான வாத்தி கம்மிங், ரொம்பவே பிரபலமாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக தோளை குலுக்கி போடும் ஸ்டெப் செமஹிட்டாகி உள்ளது. வாத்தி கம்மிங் பாடலை யூட்யூப்பில் இதுவரை 70 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தியேட்டர், ஓடிடி என இரண்டிலும் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகைகள் ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர், சமீப காலமாக மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.
நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த வீடியோவை இதுவரை 6 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.
இருந்தாலும் இவர்களெல்லாம் சினிமா துறையில் உள்ளவர்கள் ஆனால் அந்த துறையில் இல்லாத சிறுவன் ஒருவன் தற்போது வாத்தி கம்மிங் முழு பாடலுக்கும் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய் ரசிகர்கள் இந்த சிறுவனின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த விஜய்யின் மேனேஜர் ஜெகதீசம், இதனை விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் விஜய்யின் மெர்சல் அரசன் பாடலுக்கு நடனமாடிய பிரஜூனா சாரஹ் என்ற சிறுமியின் வீடியோ வைரலானதை அடுத்து, பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதனால் இந்த சிறுவனுக்கும் அதே போல வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending #VaathiComing dance video. Kid recreates the whole song in single take. #Master #Thalapathy #Vijay pic.twitter.com/cBYN6UhXkK
— Heytamilcinema (@Heytamilcinema) February 28, 2021
Thanks for Your Comments