செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

0

பூமி போலவே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வில் ஹாலந்து விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி யிருக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

2023-ல் முதல் டீம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாயிலும் வளி மண்டலம் உண்டு. 

ஆனால், கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு அதிகம் (95.32%). அதைக் கொண்டு நீர், ஆக்சிஜன் தயாரிப்பது போன்ற பணிகள் 2022-ல் நடக்கும். 

அந்த வேலைகள் முடிந்த பிறகு, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி 4 வீரர்கள் கொண்ட முதல் டீம் செவ்வாய் கிரகத்துக்கு புறப்படும். 2023-ல் செவ்வாய் சென்றடையும்.

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

அவர்கள், செவ்வாய் கிரகத்தில் முதலில் காலடி பதிக்கும் மனிதர்கள் என்ற பெருமையை பெறுவார்கள். அங்கேயே தங்கி ஆய்வு பணிகளை அவர்கள் தொடங்குவார்கள். 

மனிதர்கள் வாழ ஏற்ற யூனிட்களை மேலும் அமைப்பது, இதர அத்தியாவசிய கட்டுமானங்கள் அமைப்பது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2-வது டீம் செவ்வாயில் இறங்கும். இப்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்புது டீம் போய்க் கொண்டே இருக்கும். 2033-க்குள் குறைந்த பட்சம் 20 பேராவது இருப்பார்கள்.

ஒரு விஷயம்.. போய்ச் சேருவதற்கே செலவு எக்குத்தப்பாக ஆகும் என்பதால், போய் இறங்கியதும் ‘அப்பாவை பாக்கணும்.. ஆட்டுக்குட்டிய பாக்கணும்’ என்று பூமிக்கு திரும்ப முடியாது. 

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

போனால், போனது தான். இது ‘ஒன்வே பயணம்’ என்பதை உறுதிபட தெரிவித்திருக் கின்றனர் விஞ்ஞானிகள். கடைசி வரை அங்கேயே வாழ்ந்து அங்கேயே ‘செட்டில்’ ஆக வேண்டியது தான்.

இது தான் ஹாலந்து விஞ்ஞானிகள் போட்டிருக்கும் சூப்பர் பிளான். தகவலே கிடுகிடுக்க வைக்கும் போது, செயலில் இறங்குவது சாமானியமா? 

முதல் டீமை அனுப்பி வைக்க மட்டும் ரூ.33 ஆயிரம் கோடி செலவாகும் என்று பட்ஜெட் போட்டிருக்கி றார்கள். நல்ல ஸ்பான்சரையும் தேடி வருகின்றனர்.

முதலில் செவ்வாய்க்கும் பூமிக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பார்ப்போம்.

செவ்வாய் கிரகத்திலேயே போய் செட்டிலாயிட வேண்டியது தான்

செவ்வாயில் ஒரு நாள் என்பது 24 மணி, 39 நிமிடங்கள் மற்றும் 35.244 வினாடிகள் ஆகும். இது சற்றேகுறைய நம் பூமியின் ஒரு நாளுக்கு சமம்.

செவ்வாய் கோளில் மேற்பரப்பில் நில அளவு 28.4% இது பூமியில் உள்ள நிலத்தின் அளவை விட சற்றே குறைவு (பூமியின் மேற்பரப்பில் நிலதின் அளவு 29.2% ஆகும்).

செவ்வாய் கோள் 25.19 ° சாய்வு அச்சில் சுற்றுகிறது பூமியின் சுற்றும் சாய்வு அச்சின் அளவு 23.44 ° இதன் விளைவாக, செவ்வாய் கிரகம் பூமியைப் போன்ற பருவங்களைக் கொண்டுள்ளது, 

இருப்பினும் அவை சராசரியாக பூமியை விட இரு மடங்கு காலம் நீடிக்கும், ஏனெனில் செவ்வாய் ஆண்டு சுமார் 1.88 பூமி ஆண்டுகள் ஆகும். நாசாவின் ஆய்வுகள் மற்றும் பீனிக்ஸ் லேண்டர் அனுப்பிய படங்களை வைத்து செவ்வாய் கோளில் நீர் இருப்பதாக நம்பப் படுகிறது.

அப்ப என்ன இந்த பூமி போரடிச்சு போச்சு பேசாம போய் செவ்வாய் கிரகத்திலேயே போய் செட்டிலாயிட வேண்டியது தான்னு நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ளவற்றையும் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

நாம் பூமியில் வசிப்பது போல் சுதந்திரமாக வசிக்க முடியாது. அங்கு செல்லும் தூரம் அதிகம் சுற்றுப்பாதை சீரமைப்புகளைப் பொறுத்து, 

(Orbital alignment) பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான தூரம் 55 மில்லியன் கிலோ மீட்டர் முதல் 400 மில்லியன் கிலோ மீட்டர் வரை இருக்கும்.

இது பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரத்தை விட 140 முதல் 1,025 மடங்கு அதிகம். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கோளை சென்றடைய ஆறு மாதம் ஆகும் என்று கணக்கிட்டுள்ளது

அவர்கள் அங்கு செல்லும் போதே Space adaptation syndrome or space sickness விண்வெளி தழுவல் நோய்க்குறி அல்லது விண்வெளி நோய் என்ற நோயால் பாதிக்கப் படக்கூடும் ஒரு வகையான இயக்க நோயாகும்.

மூடப்பட்ட கொள்களனில் பயணிப்பதால் மன அழுத்த நோயால் பாதிக்கப் படலாம். 0.16% ஆக்ஸிஜனை மட்டுமே கொண்ட வளி மண்டலமே செவ்வாயில் உள்ளது,.

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

நீங்கள் சுவாசிக்க திரவ ஆக்சிஜன் தேவைப்படும். செவ்வாயின் வெப்பநிலை -60 டிகிரி செல்ஸியஸ் மேலும் பூமி போல் வளிமண்டல அழுத்தம் கிடையாது. 

எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாமல் அதன் நிலப்பரப்பில் 2 நிமிட நேரம் மட்டுமே உயிர் வாழ் முடியும். கொடிய அண்ட கதிர்களிடமிருந்து ( cosmic rays ) உங்களைப் பாதுகாக்க எதுவும் அங்கு இல்லை.

அங்கு தண்ணீர் கிடையாது அப்படியே இருந்தாலும் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக இருக்கும். ஈர்ப்பு விசை (gravity) மிகவும் குறைவு அந்த சூழ்நிலையில் நம்மால் வெகு நேரம் இருக்க முடியாது.

காய்கறிகளுக்கு பிரத்தியேக தோட்டம்

அங்கு மரமோ, பயிர் செய்யும் இடங்களோ இல்லை. கிட்டத்தட்ட அங்கு மனிதன் வாழ அத்தியாவசியமாக தேவைப்படும் எதுவுமே இல்லை.

சிறிது காலத்திற்கு உணவு, உடை உட்பட மனிதன் வாழ்வதற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் இங்கிருந்து தான் கொண்டு செல்ல வேண்டி வரும் இதற்கு அதிக செலவு பிடிக்கும்.

ஒரு வேளை அங்கேயே உற்பத்தி செய்யலாம் என்று நினைத்தாலும் இங்கு பூமியில் உள்ள நடைமுறையில் செய்ய முடியாது. 

காய்கறிகளை அதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக தோட்டங்களில் மட்டுமே வளர்க்க முடியும்.

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? பிரச்சனைகள் என்ன?

விலங்குகளை அவ்வாறு வளர்க்க முடியாது அசைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு பூச்சிகளும், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கையான இறைச்சியே கிடைக்கும்.

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு செவ்வாய்க்கு போவதை விட நாம் வாழும் பூமியின் சுற்று சூழல் பாதுகாப்பில் நாமெல்லோரும் கவனம் செலுத்தினால், 

மனித இனம் இந்த பூமியிலேயே இன்னும் நெடுங்காலம் நீடித்து வாழலாம்.அதை செய்வதற்கு நாம் அனைவரும் உறுதி யெடுப்போம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings