பிசினஸ் விஷயமாக சென்னைக்கு வாரம் இரு முறை ரயில் பயணம் செய்பவன் நான். சமீபமாக ரயில் பயணங்களின் போது, எலிகளின் அலப்பறை தாங்க முடியாததாக உள்ளது.
உணவுப் பண்டங்கள், லக்கேஜ்களை அவை பதம் பார்ப்பது பற்றி டிக்கெட் பரிசோதகரிடம் சொன்னால், ‘எலிகளை ஒழிப்பது என்னுடைய வேலை இல்லை’ என்கிறார். இது குறித்து யாரிடம் புகார் தரலாம்?
- சேதுராமன், வள்ளியூர்.
பதில் சொல்கிறார் மக்கள் தொடர்பு அதிகாரி, தெற்கு ரயில்வே ரயில் ஒரு மொபைல் வீடு. நான்கு நாள் வரை பயணிக்கும் தொலைதூர ரயில்கள் எல்லாம் கூட இருக்கின்றன.
ரயிலிலேயே தூங்கி, எழுந்து, குளித்து, சாப்பிட்டு தொலை தூரம் பயணம் செய்கிறவர் களும் இருக்கிறார்கள்.
இப்படிப் பட்ட இடத்தில் வீட்டில் இருக்கும் எலி, எறும்பு, கரப்பான் பூச்சி போன்றவை எப்படியாவது வந்து விடுகின்றன.
ரயில்வே மெக்கானிகல் டிபார்ட் மென்டில் ‘ஃப்யூமிகேஷன் யார்டு’ என இதற்கென ஒரு தனிப்பிரிவே இயங்கி வருகிறது.
சென்னையில் பேசின் பிரிட்ஜில் இருக்கிறது இந்த யார்டு. ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடைவெளி யில் இங்கு கொண்டு வரப்பட்டு,
இதை சாப்பிட்டால் உங்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறுவதை தடுக்கலாம்?
கிருமி நாசினி கலந்த புகை மூட்டத்துக்கு உள்ளாக்கப் பட்டு, எலி, கரப்பான் பூச்சி போன்ற வற்றை விரட்டவும் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
என்ன தான் பெட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும், ஆங்காங்கே ரயில் நிலையங் களில் ரயில் நின்று செல்லும் போது, அங்கு குடியிருக்கும் எலிகள் ரயிலில் ஏறி விடுகின்றன.
ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் தெரியுமா?
இது தொடர்பாக ரயில் நிலையங் களுக்கும் நாங்கள் அவ்வப்போது சர்க்குலர் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம்.
அது தவிர, பயணிகள் தரும் எழுத்துப் பூர்வமான புகாருக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அப்படி புகார் தர நினைப்ப வர்கள் ‘மக்கள் தொடர்பு அதிகாரி, தெற்கு ரயில்வே, சென்னை - 600003’ என்ற முகவரியில்
தபால் மூலமாகவோ, நேரிலோ தரலாம். அல்லது, பயணம் தொடங்கிய - முடிவுற்ற ரயில் நிலையத்தின் மேலாளரிட மும் புகாரைத் தரலாம்.
இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !
புகாரில் தாங்கள் பயணித்த வண்டியின் பெயர், எண், கோச் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக இருக்கும் படி, பயணச் சீட்டின் நகலை இணைக்க வேண்டியது அவசியம்.
Thanks for Your Comments