பெரும்பாலான பயணிகளுக்கு விமானப் பயணம் மிகவும் விருப்பமான போக்குவரத்து பயணம்.
விமான நிலையங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாக உள்ளன.
ஏனெனில் விமான நிலையம் எங்கிருக்கிறதோ அந்த இடம் செல்வ செழிப்பானது என்று கூறலாம். விமான வசதி நகர்ப்புற வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
தற்போதைய காலங்களில், விமான நிலையம் இல்லாத ஒரு நாட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.
எவ்வாறாயினும், இட நெருக்கடி மற்றும் இயற்கை சூழல் காரணமாக விமான நிலையம் இல்லாத ஐந்து நாடுகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
இவ்வைந்து இடங்களிலும் காலநிலை மற்றும் இடவசதி பற்றாக் குறையாலும் விமான சேவையை நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. அவற்றை பற்றி இங்கே காண்போம்.
வாட்டிக்கன்
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும்.
இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை.
ஆகையினும் மக்கள் பக்கத்து நாடான சியாம்பினோ மற்றும் ஃபியமிசினோ விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.
அன்டோரா
ஆனால் பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது,
குறிப்பாக பனி மற்றும் மூடுபனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.
மேலும் இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்கு மட்டும் சியோ டி உர்கெலுக்கு அருகிலுள்ள கட்டலோனியாவின் அன்டோரா-லா சியு விமான நிலையம் 30 கி.மீ தூரத்தில் உள்ளது.
சான் மரினோ
கடல் வழி பயணம் கூட இந்நாட்டிற்கு இல்லை. நாட்டின் சுற்றளவு பொறுத்தவரை வெறும் 40 கி.மீ க்கும் குறைவாகவே உள்ளதால் விமான நிலையம் அமைக்க இங்கு போதிய இடமில்லை.
ஆனால் அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது.
சான் மரினோ சாலை வழியாக நாலாபுறமும் இணைக்கப் பட்டுள்ளது, போலோக்னா, புளோரன்ஸ், பீசா மற்றும் வெனிஸ் விமான நிலையங்களுக்கு சான் மரினோ, நல்ல அணுகலைக் கொண்டுள்ளது.
அவை அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவை பெரும்பாலும் உள்ளூர் வாசிகளாலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன.
லிச்சென்ஸ்டைன்
மேலும் 75 கிலோ மீட்டர் முழு சுற்றளவையும் கொண்டுள்ளதால் இந்நாட்டில் விமான சேவையை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டின் தனித்துவமான இடம் மற்றும் புவியியல் சூழல்களால், இங்கு விமான நிலையத்தை உருவாக்க முடியவில்லை.
இருப்பினும் சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் சூரிச் விமான நிலையம் இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
மொனாக்கோ
மேலும் இந்நாட்டின் மோசமான இடநெருக்கடி யாலும் 40,000 மக்கள் தொகையாலும் இங்கு விமான சேவையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments