தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியதால் பள்ளிக்கல்வியை மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் கற்க நிலை ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னர் நடப்பாண்டு தொடக்கம் முதல் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்ததால், பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
எனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதிய இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகிய முன்னேற்பாடுகள் உடன் பள்ளிகளில் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழக அரசு யாரும் எதிர் பார்க்காத வண்ணம் திடீரென 9 முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவித்தது.
அதே சமயம் எஞ்சிய பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மறுபுறம் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 2ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன.
தேர்தல் தொடர்பான பணிகள் பெரும்பாலும் பள்ளிகளில் தான் நடைபெறும். இதன் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை விட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன் பின்னர் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்படவுள்ளது. தேர்தலுக்கு பின்னர் பிளஸ் 2 வகுப்பிற்கும் மட்டும் பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks for Your Comments