சொந்தமாக விமானம் வாங்கிய திரைப்பட தயாரிப்பாளர் !

1 minute read
0

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்களுக்கு இருக்கின்ற மவுசு வேறு எந்த துறை சார்ந்தவர்களுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
அதிலும் முன்னணி நட்சத்திரங்களாக, திறமை யுள்ளவர்களாக இருந்து விட்டால் அவ்வளவு தான் அந்த துறையும் மக்களும் சேர்ந்து கொண்டாடுவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் சில குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களே தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வசதியான தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். 

சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக கடன் வாங்கியாவது பந்தா காட்டுவார்கள்.

ஆனால் உண்மையில் தற்போதைக்கு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், 

விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சென்சேஷனல் நடிகர்களாக இருக்கும் அனைவரது படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் சொந்தமாக விமானம் வைத்துள்ள தயாரிப்பாளரும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான். 

இவரிடம் இல்லை என்றால் தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு வியாபாரத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தற்போது அவரை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் சொந்தமாக விமானம் வாங்கியுள்ளவர் ஐசரி கணேஷ். 

ஐசரி கே கணேஷ் (Ishari K Ganesh) சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார். 

இவர் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சொந்தமாக விமானம் வாங்கிய ஐசரி கே கணேஷ் - Ishari K Ganesh

சில படங்கள் சொதப்பினாலும் பெரும்பாலான படங்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றியையே கொடுத்துள்ளது. 

இவருக்கு படங்கள் தயாரிப்பது இரண்டாம் பட்சம் தான். மெயின் தொழில் வேல்ஸ் யூனிவர்சிட்டி என்ற கல்லூரி வருமானம் தான். 

தற்போது சினிமாவில் கவனிக்கப்படும் தயாரிப்பாளராக வலம் வருவதால் தனது இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தமாக ஒரு விமானம் வாங்கி விட்டாராம். 

வாங்கிய விமானத்தை சும்மா நிறுத்தி வைத்திருக்க கூடாது என்பதற்காக துபாய், மாலத்தீவு என ஜாலியாக ரவுண்ட் அடித்து வருகிறாராம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 12, April 2025
Privacy and cookie settings