மின் வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு கோரி வாரிசுகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வாரிசுதாரர்கள், தங்களது தந்தை அல்லது தாய் பணி புரிந்த மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கு வாரிசுதாரர்களின் கல்வி, வயது, வாரிசுரிமை சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர், அவற்றின் உண்மைத் தன்மையை அறிய, வாரிசுதாரர்கள் படித்த கல்வி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரி பார்க்கப்படும்.
பின்னர், வேலை வழங்க தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த நடைமுறையால் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள் !
இதைத் தொடர்ந்து, வாரிசு வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதே போல, சான்றிதழ்களை சரிபார்ப்பதிலும் புதிய நடைமுறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஷி. (BCG) தடுப்பூசி - குழந்தை பிறந்தவுடன் !
பணியில் சேர்ந்த பிறகு கல்விச் சான்றிதழ் போலி என தெரிய வந்தால், பணி நீக்கம் செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.
Thanks for Your Comments