தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் நோய் பரவல் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் திறக்க உத்தர விடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் ஏற்கனவே செயல்பட்டு பின்னர் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது வந்தது.
இருப்பினும், சில மாநிலங்களில் மட்டும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அந்த மாநிலங்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்களும் அனுப்பப்பட்டன.
அவர்களில் 85% பேர் வெறும் ஆறு மாநிலங்களில் மட்டும் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிலும், 60% கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் மட்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
அதேபோல கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தல் நடத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என அஞ்சப்பட்டது.
அதே போல உயிரிழப்புகளும் மகாராஷ்டிராவிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அங்கு 54 பேரும், பஞ்சாபில் 17 பேரும், கேரளாவில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 19 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட வில்லை.
Thanks for Your Comments