விமான பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு ஆலாதி பிரியமான ஒன்று, சிலர் விமானத்தில் பயணம் செய்வதையே தங்கள் வாழ்நாள் விருப்பமாக கூட வைத்திருக்கின்றனர்.
இன்று அதிக தூரம் கொண்ட பயணங்களுக்கு பலரும் விமானத்தை முதல் நிலை வாகனமாக தேர்வு செய்து வருகிறார்கள்.
அதை வளப்படுத்தும் திட்டங்களும் அரசிடம் அதிகம் உள்ளன. இன்று விமானம் பயணம் என்றால் ஜாலி என்று சொல்லும் அளவிற்கு நம்மில் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் விமான பயணத்தின் போது சிலர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி சில பேர் மட்டுமே உயிரிழக்கிறார்கள்.
அப்படி நடுவானில் யாராவது உயிரிழந்தால், விமானத்தில் என்ன நடக்கும்?
விமான பயணத்தின் போது யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பணிப்பெண்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பார்கள்.
இதற்கென விமான ஊழியர்களுக்கும், பணிப் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் விமானங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபரகணங்களும், விதிமுறைகளின்படி வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் அருகில் இருக்கும் மற்ற பயணிகளுக்கும் இது கடினமான சூழலையும் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணிகளுக்கு விமான ஊழியர்கள் சிகிச்சை வழங்குகின்றனர்.
அத்துடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளில் மருத்துவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் உதவியும் பெறப்படுகிறது.
சில அவசர சமயங்களில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணியின் உயிரை காப்பாற்றுவதற்காக, அருகில் உள்ள விமான நிலையங்களில் பைலட்கள் விமானங்களை தரையிறக்கவும் செய்கின்றனர்.
ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னதாகவோ உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணி உயிரிழந்து விடும் சூழல் சில சமயங்களில் ஏற்படுகிறது.
அப்படி யாராவது உயிரிழக்க நேரிட்டால், அவரது உடல் போர்வையால் மூடப்படும். பின்னர் காலி இருக்கை ஏதேனும் இருக்கும் பட்சத்தில், அதில் அவரது உடல் வைக்கப்படும்.
ஒரு வேளை விமானத்தில் இருக்கை எதுவும் காலியாக இல்லை என்றால், உடல்களை வைக்கக்கூடிய பையில், உயிரிழந்தவரின் உடல் வைக்கப்படும்.
பின்னர் விமானத்தின் பின் பகுதியில் உள்ள சமையலறையில் அவர் உடல் கிடத்தப்படும். சில சமயங்களில் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் விமான ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விமான பயணத்தின் போது ஒருவர் உயிரிழந்து விட்டார்.
பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு என விமானங்களில் பிரத்யேகமான இடவசதிகள் எதுவும் இருக்காது.
எனவே நடுவானில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான நடைமுறைகள், ஒவ்வொரு விமான நிறுவனங்களை பொறுத்தும் மாறுபடுகின்றன.
வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை எது நல்லது?
ஆனால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமாகவும், மரியாதையுடனும் கையாள வேண்டிய பொறுப்பு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு உள்ளது.
சம்பந்தப்பட்ட விமானம் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற அனுமதிக்கப் படுவார்கள். அனைவரும் கீழே இறங்கியவுடன், மருத்துவர்கள் வந்து உயிரிழந்தவரின் உடலை பரிசோதிப்பார்கள்.
அதன் பின்னர் விமானத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து அவர்களிடம் முழுமையாக விளக்கப்படும்.
பொதுவாக பயணிகள் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால் விமானம் உடனே அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படும்.
ஆனால் விமானத்தில் யாராவது ஒருவர் உயிரிழந்து விட்டால், விமானம் திருப்பப் படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
Thanks for Your Comments