விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை !

0
மென்மையாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும். 1. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றால் உயிரை பாதுகாக்க முடியும். 
விரைந்து சென்றால் உயிரை பாதுகாக்க முடியும்
2. அமைதியாகவும், முறையாகவும், விரைவாகவும் இவ்வாறு செயல்பட்டால் வலியும் மற்ற பாதிப்புகளும் குறையும். 

இதனால் உயிரும் காக்கப்படும். அறை குறையாக பாதிக்கப்பட்டவரை கையாண்டால் அவரின் உடல் நலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். 

3. சுவாசம் தடைபடுகிறதா? ரத்த ஒழுக்கு அதிகமாக இருக்கின்றதா? அவருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி குறைவானதா, அதிகமானதா? என்பதை கவனிக்கவும். 

உடனடி சிகிச்சை 
உடனடி சிகிச்சை
1.மேற்கண்டவற்றுக்கும் சுலபமாக தெரியக்கூடிய காயங்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். 

2. ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதால் சுவாசம் இழந்தவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். 

3. ரத்த ஒழுக்கு ஏற்படும் இடத்தில் பற்றுத்துணி, அணை வைத்து நேரிடையாக அதன் மேல் அழுத்தியோ அல்லது தமனிகளை உரிய இத்தில் அழுத்தியோ ரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும். 

4.அதிர்ச்சிக்கு சிகிச்சை கொடுக்கவும். 

5. அனாவசியமாக பாதிக்கப்பட்டவரை அலை கழிக்காதே. 

6. ரெயில் நிலையம், ரெயில் வண்டி, பேருந்துகளிலும் முதல் உதவி மருந்துப் பெட்டி இருக்கும். அவைகளிலிருந்து தேவையானவற்றை எடுத்து முதல் உதவி செய்யலாம்.

பல நேரங்களில் முதல் உதவி உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றால் அங்கு கிடைக்கும் பொருட்களை உபயோகித்து முதலுதவி செய்ய வேண்டும். 

7. விபத்து நடந்த இடத்தில் மின்சாரம், இடிபாடுகள், தீ, விஷ வாயுக்கள் ஓடும் இயந்திரங்களால் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் அப்புறப்படுத்த வேண்டும். 

8. கூட்டம் சேராமல் தடுத்து காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர் இருந்தால் அவர் சொல்படி செயல்பட வேண்டும்.

முதல் உதவியாளர் ஒருவர் இருந்தால் அவர் உதவியையும் எடுத்துக் கொண்டு, இல்லை யெனில் பொது மக்களில் சிலரின் ஒத்துழைப்போடு சிகிச்சை அளிக்க வேண்டும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை !
9. வானிலைக்கு ஏற்றவாறு பாதிக்கப் பட்டவரை அப்புறப்படுத்தி, குளிர், வெயில், காற்று இவைகளி லிருந்தும் காக்க வேண்டும். 

தேவைப் பட்டால் குடை, விரித்தத் துணி, செய்தித்தாள் இவைகளையும் உபயோகிக் கலாம். 

10. மென்மையான வார்த்தைகளைப் பேசி அன்போடும், ஆதரவோடும் செயல்பட்டு அமைதியாக இருக்கச் சொல்ல வேண்டும். 

11. மருத்துவ வசதிக்கு அனுப்ப ஏற்பாடு செய். உறவினருக்கு செய்தி அனுப்ப வேண்டும். 

12. உயிரைப் பாதுகாக்கவும், நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான சிகிச்சை அளித்தால் போதும். 
அதற்கு அதிகமாக சிகிச்சை கொடுப்பதை தவிர்க்கவும். குறிப்பு: கீழ்கண்ட மூன்று அவசர நிலைமைகள் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்புக்கு ஏதுவாகும். 

1.சுவாசமும் ரத்த ஓட்டமும் தடைபடுதல் 

2.அதிக ரத்த ஒழுக்கு. 

3.உணர்வு அற்றுப் போதல். உயிரைக் காக்க அடிப்படை ஆதார தேவைகளான காற்று செல்லும் பாதையை சீராக்குதல். 
இரத்த ஓட்டம் உண்டாக்குதல்
தேவையான சுவாசமளித்தல். தேவையான இரத்த ஓட்டம் உண்டாக்குதல் போன்ற செயல் பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

பாதிக்கப் பட்டவருக்கு ரத்த ஓட்டத்தை உண்டாக்க: தரை, நாற்காலி, மேசை போன்ற உறுதியானவற்றின் மீது படுக்க வைக்கவும். கால்பக்கம் சிறிது உயர்த்தி வைத்தால் தலைக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். 

சுவாசம் தடைபட்டதை கண்ட றிந்து இரண்டு முறை வாயோடு வாய் வைத்து ஊதிய பின்பு வெளிப்புறமாக இருந்து இருதயத்தை அழுத்தி இரத்த ஓட்டத்தை உண்டாக்க வேண்டும். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings