'கிரியேட்டினின் ' என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப் படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல்.
பல்வேறு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் சிகிச்சை அளவுக்குச் செல்வதற்கு முன்னே சில கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் கிரியேட்டினின் அளவு கூடி விடாமல் பராமரிக்க முடியும்.
நம் உடலின் தசைகளின் இயக்கத்தில் உபரி பொருளாக கிரியாட்டினைன் என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இது ஒரு வேதிக்கழிவு (கெமிக்கல் வேஸ்ட்) ஆகும்.
நம் உடலில் காணப்படும் கிரியாட்டினைன், கிரியேட்டினின் என்ற இயற்கை வேதிப்பொருளாக உள்ளது.
பெருமளவு கிரியாட்டினைன் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்பட்டு பின்னர் சிறுநீரகங்கள் மூலம் வடிகட்டப்படுகிற்து; சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.
சில நேரங்களில் கிரியாட்டினைனின் அளவு உடலில் அதிகமாகி, உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதிகமானால் சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது.
கிரியாட்டினைன் அளவு
ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dL அளவும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL அளவும், பதின்ம வயதினருக்கு 0.5 முதல் 1.0 mg/dL அளவும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL அளவும் கிரியாட்டினைன் இருக்க வேண்டும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல், பாக்டீரியா தொற்று ஆகியவை இருப்போர் கிரியாட்டினைன் அளவை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.
கிரியாட்டினைன் அளவு சற்று அதிகமாக இருப்போர் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டால் அதை குறைக்கலாம்.
புரதம்
அதிகமான சில உணவுகள் கிரியாட்டினைன் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆடு, மாடு இவற்றின் இறைச்சி, சில பால் பொருள்கள் ஆகியவற்றை தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிட்டால் புரதத்தின் காரணமாக கிரியாட்டினைன் உயர்வதை தடுக்கலாம்.
சிட்டோசன்
இது உடலில் கிரியாட்டினைன் அளவையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
புகை பிடித்தலை தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது, இவற்றுடன் உடற்பயிற்சி களுக்காக புரத உணவுகள்,
கிரியேட்டினின் துணை உணவுகள் இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பதும் கிரியாட்டினைன் அளவை சீராக பராமரிக்க உதவும்..
நார்ச்சத்து
அதிக அளவு நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கிரியாட்டினைன் அளவு குறையும். பழங்கள், காய்கறிகள், பயிறுகள், பருப்பு மற்றும் முழு தானியங்கள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நீர்ச்சத்து
சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் படியே நீர் அருந்த முடியும். மற்றவர்கள் நாளுக்கு 8 முதல் 10 தம்ளர் நீராவது அருந்த வேண்டும்.
உப்பு
பதப்படுத்தப்பட்ட பொருள்களில் உப்பு, சோடியம் அதிகம் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
உணவுக்கு சுவையூட்ட உப்பை தவிர வேறு இயற்கை பொருள்களை பயன்படுத்தலாம். ஒருநாளைக்கு 2 மேசைக்கரண்டி அளவுக்கு மேல் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.
Thanks for Your Comments