வில்லென உடம்பை வளைத்த காஜல்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள் !

0

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 

வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. 

பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி     கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார், 

இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்தது.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. 

பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், 

ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை. அது வரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. 

இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் காஜல் அகர்வால். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு மொழிகளிலும் இவர் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தொழிலதிபரான கவுதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். 

வில்லென உடம்பை வளைத்த காஜல்
தமிழ், தெலுங்கு, இந்தியில் ஆச்சாரியா, கோஸ்டி, மும்பை சாகா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஃபிட்னசிலும் அதிகம் ஆர்வம் கொண்ட காஜல் அகர்வால், சமூக வலைதளங்களிலும் படுபிஸியாக இருந்து வருகிறார். தற்போது உடலை நம்ப முடியாத அளவிற்கு வளைத்து, யோகா போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் காஜல்.

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள இந்த யோகா போசை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த போட்டோவுடன், ஃபிட்னஸ் இந்தியா மூவ்மென்டுக்காக தான் இந்த செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings