உடம்பை குறைத்ததால் வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் !

0

1995 ல் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

உடம்பை குறைத்த வனிதா
அதையடுத்து ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்பட பல படங்களில் நடித்தவர், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயரில் ஒரு படத்தையும் தயாரித்தார். 

சமீப காலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 

மேலும், கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அடுத்த சில மாதங்களிலேயே அவரை விட்டும் பிரிந்தவர், தற்போது தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதாவிற்கு தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 

உடம்பை குறைத்ததால் வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒரு படத்தில் ஹீரோயினாகவும், மற்றொரு படத்தில் சிவ நாடாருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். 

இப்போது 90 களில் பிரபல ஹீரோவாக இருந்த பிரசாந்த், தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு நடிக்க வந்துள்ள அந்தகன் படத்திலும் நடிக்க புக் ஆகி உள்ளார். 

இது இந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் ரீமேக். இதில் கார்த்திக், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. இதனால் வனிதா ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings