இறந்து போன சகோதரி உடலுடன் 6 மாதம் வாழ்ந்த நபரால் கொல்கத்தாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரின் மீது மற்றொருவர் வைக்கும் எல்லையற்ற அன்பு அவரை என்ன வேண்டு என்றாலும் செய்ய வைக்கும்.
2005ஆம் அண்டு பார்த்தாவின் தாயார் மரண மடைந்திருக்கிறார். இதன் பின்னர், தனது தந்தை அரவிந்தா பிரிட்டன் மற்றும் சகோதரி டெப்ஜானி ஆகியோருடன் அதே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், அரவிந்தா பிரிட்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, அங்கு வந்த வந்த போலீசார் அரவிந்தா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, பார்த்தா டேவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பார்த்தா எதையோ மறைப்பது போன்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, பார்த்தா டேவிடம் காவல் துறையினர் உருக்கமாக பேசியிருக்கின்றனர். "எங்களை உனது சகோதரனைப் போன்று நினைத்துக் கொள்.
இதையடுத்து, பார்த்தா கூறிய தகவல்கள் காவல் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பார்த்தா கூறுகையில், ''எனது தாயார் கடந்த 2005ஆம் ஆண்டு இறந்து விட்டார்.
இதையடுத்து, விரக்தியடைந்த நான் வேலைக்கு செல்லாமல், எனது தந்தை மற்றும் சகோதரியிடன் வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன்.
எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் 2 பேரிடம் வாடகையை வசூலித்து சாப்பிட்டு வந்தோம். இந்நிலையில், எனது சகோதரி டெப்ஜானி வளர்த்து வந்த 2 நாய்களும் திடீரென இறந்து விட்டது.
ஆனால், அந்த நாய்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் எனது சகோதரி உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எனது சகோதரியும் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்வோம் என எனது தந்தை கூறினார்.
ஆனால், என்றைக்காவது ஒரு நாள் எனது சகோதரி மறுபிறவி எடுத்து வருவாள் என்ற நம்பிக்கையுடன், அவரது உடலையும், இறந்த நாய்களின் உடலையும் ஒரு அறையில் வைத்து தினமும் அவர்களுக்கு உணவு ஊட்டி வருகின்றேன்'' எனக் கூறியிருக்கிறார்.
இதனால் அரண்டு போன காவல்துறையினர், அந்த குரல் குறித்து ஆய்வு செய்த போது, 'கோஸ்பல் ஆப் ஜாய்ஸ் மேயர்' என்ற பிரச்சார கேசட் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
ரேபிஸ் நோய் எப்படி வருகிறது?
இதையடுத்து, பார்த்தாவின் படுக்கையறைக்குள் காவல்துறையினர் சென்று பார்த்தபோது, பார்த்தாவின் கட்டிலுக்கு கீழே அழுகிய நிலையில், இறந்த போன நாயின் எலும்புக்கூடு கிடந்திருக்கிறது.
மேலும், பார்த்தாவின் கட்டிலை ஒட்டி போடப்பட்டிருந்த மற்றொரு சிறிய கட்டிலில் அவரது சகோதரி டெப்ஜானி உடல் அழுகிய நிலையில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.
அதன் அருகில் உணவுகளும் சிதறி கிடந்திருக்கிறது. அழுகிய உடல்களின் துர்நாற்றம் வெளியில் செல்லாத வகையில் அந்த அறையை முழுவதுமாக சீல் வைத்திருந்தார் பார்த்தா.
இதையடுத்து, நாய்களின் எலும்புக்கூடு மற்றும் பார்த்தாவின் சகோதரியின் எலும்புக் கூட்டையும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்பானி கார் டிரைவர் மாத வருமானம் !
பார்த்தாவின் சகோதரி டெப்ஜானி சாதாரணமான நிலையில் இறந்திருக்கிறாரா? அல்லது அவரது இறந்ததற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என ஆய்வு செய்து கூறுமாறும் டாக்டர்களிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அவர் தனது சகோதரி மீது வைத்திருந்த அளவற்ற அன்பு தான். இறந்தவர்களுடன் வாழ்பவர்களை பல திரைப்படங்களில் பார்க்கலாம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் இது போன்ற விசித்திர சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கிறது.
தங்களுக்கு பிடித்த இறந்தவர்களுடன் வாழ்ந்தவர்கள் எதற்காக அப்படி செய்தார்கள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Thanks for Your Comments