அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள் !

0

பழுதடைந்த விமானங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், தரையிறங்கும் விமானங்களுக்கு பார்க்கிங் இடம் ஒதுக்க முடியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகம் திணறி வருகிறது. 

பழுதடைந்த விமானங்கள்

இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் பேசும் போது, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 13 பழுதடைந்த விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

அதில் 9 விமானங்கள் கிங்ஃபிஷெர் நிறுவனத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள 4 என்.இ.பி.சி நிறுவனத்திற்கு சொந்தமானது. 

இப்படி சென்னையிலேயே இத்தனை விமானங்கள் பழுதடைந்து இருந்தால் அமெரிக்காவில் எத்தனை விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் உலகத்திலேயே அதிகமான பழுதடைந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அமைந்துள்ள அரிசோனா பாலைவனத்தில் விண்வெளி பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கக் குழு இயங்கி வருகிறது. 

இறால் திதிப்பு செய்முறை !

இங்கு உலகத்திலேயே அதிகமான ராணுவ விமான வகைகள் உள்ளன. அதாவது, ராணுவப் பணிகளில் இருந்து விடைபெற்ற, வனப் பணிகளில் ஈடுபடுத்த பழைய விமானங்களும் நாசாவின் விமானங்களும் வைக்கப்பட்டுள்ளன. 

F-16, C-5s, B-52s, A-4 ஸ்கைகவாஸ் உள்ளிட்ட விமான வகைகள் இங்கு அதிகளவில் உள்ளன. உதிரி பாகங்களை சரிசெய்து, விமானங்களை மீண்டும் உருவாக்கும் பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. 

விமானங்களை மீளுருவாக்கும் செய்யும் பணிகளில் 800 மெக்கானிக் இடைவிடாமல் பணியாற்றி வருகிறார்கள்.

இது தொடர்பாக குழுவின் கமாண்டர் ஜெனிபர் பர்னாட் கூறுகையில், எங்களுடைய நோக்கம் பழுதான விமானங்களுக்கு சமாதி கட்டுவதல்ல. 

ஒரு காரை மறு உருவாக்கும் செய்வது போல தான் விமானத்தையும் செய்கிறோம், அதில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறினார். 

அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1946 ஆம் ஆண்டு விமானப் பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கக் குழு தொடங்கப்பட்டது. 

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழைய விமானங்களை நிறுத்தி வைக்க ஒரு இடம் தேவைப்பட்ட நிலையில் தான் அரிசோனா பாலைவனத்தில் டக்சோன் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

தற்போது 80 வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த 3,100 விமானங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஃபிஷ் மொய்லி செய்முறை !

2,600 ஏக்கர் பரப்பளவில் இந்த விமானங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. தற்போது இங்கு 80 வகையான  போர்  விமானங்கள் உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings