பொருட்களை விற்பனை செய்த சரவணா ஸ்டோரே இன்று விற்பனைக்கு !

0

இது வரைக்கும் சரவணா ஸ்டோருக்கு சென்று நாம் அனைத்து பொருட்களையும் வாங்கிருக்கலாம். இப்போது சரவணா ஸ்டோரே விற்பனைக்கு வருகிறது.

பொருட்களை விற்பனை செய்த சரவணா ஸ்டோரே இன்று விற்பனைக்கு !
மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கிச் செல்பவர்கள், முதலில் நுழையும் தெரு, ரங்கநாதன் தெரு. இது, அப்போது பிராமணர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரமாக இருந்தது. 

இந்த அக்ரஹாரத்தில் பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகள். வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் மாட்டுத் தொழுவங்கள் இருந்தன. 

தி.நகர் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் மேட்லி சுரங்கப் பாதைக்கு மேலே இருந்து சீனிவாசா திரையரங்கு செல்லும் வழியில் கோதண்டராமர் கோயில் தெரு இருக்கிறது. 

இந்தத் தெருவில் இன்றும் பல வீடுகள் ஓட்டு வீடுகளாகவே இருக்கின்றன. இதே போன்று தான் ரங்கநாதன் தெருவும் இருந்தது என்று அப்போதைய காலத்தைச் சேர்ந்தவர்கள் நினைவு படுத்துகிறார்கள்.

1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித் தொடராக பல கிளைக் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores). 

தற்போது இது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித் தொடர் கடைகளாக ஜொலிக்கிறது. 

சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. 

பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது. 

இந்நிலையில் திநகரில் உள்ள இந்தியன் வங்கி ஒரு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், திநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 

288 கோடியே 8 லட்சத்து 67 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மார்ச் 17 ஆம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings