முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவில் ஒரு வார காலம் தங்கியிருந்த சசிகலா, கடந்த மாதம் 8ஆம் தேதி சென்னை திரும்பினார்.
சுமார் 24 மணி நேர பயணத்துக்கு பின்னர் சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தார்.
யாரையும் சந்திக்காமல் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மட்டும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
அரசியலில் இருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் சசிகலா அறிவித்தார். அதன் பின் வீட்டிற்கு உள்ளேயே இருந்த சசிகலா இப்போது தான் வெளியே வர தொடங்கி உள்ளார்.
நேற்று மாலை தி நகரில் உள்ள இளவரசி வீட்டில் இருந்து கிளம்பி ஆரவாரமில்லாமல் தஞ்சாவூருக்கு சசிகலா வந்தார். சரியாக நேற்று இரவு தஞ்சைக்கு ரீச் ஆனார்.
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார். இங்கு மறைந்த நடராசன் கட்டிய பெரிய வீடு இருக்கிறது.
பங்களா போல இருக்கும் சொகுசு வீடாகும் இது. இங்கு தான் சசிகலா அடுத்த சில நாட்களுக்கு தங்க போகிறார்.
பெரிய அளவில் கூட்டத்தோடு உறவினர்கள் பலர் சசிகலா உடன் இருந்தனர். உறவினர்கள் பலர் இருந்தாலும் கட்சிக்காரர்கள் யாரும் இல்லாமல். ஆரவாரம் இன்றி வழிபாட்டை நடத்தினார்.
அதன்பின் மீண்டும் ஓய்வு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றவர் பின் வெளிய வரவில்லை. இன்னும் சில நாட்கள் சசிகலா தஞ்சையில் இருக்க போகிறார்.
மார்ச் 20ம் தேதி நடராசனின் நினைவு நாள் வருகிறது. விளார் சாலையில் உள்ள நடராசனின் சமாதியில் சசிகலா மரியாதை செலுத்துவது தான் இந்த பயணத்தின் நோக்கம்.
ஆனால் இதில் அரசியல் தலைகள் யாரும் இல்லை.. எல்லாம் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
இப்படி திடீரென கோவில் கோவிலாக சசிகலா செல்வதற்கு பின் வேறு எதோ காரணம் இருக்கிறது .. எதையோ மனதில் வைத்து தான் சசிகலா இப்படி செய்கிறார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
Thanks for Your Comments