வயதானவரிடம் திருமண ஆசை காட்டி அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாயை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். மும்பையில் மல்வானி பகுதியில் ஜெரோன் டி சவுசா என்ற முதியவர் வாழந்து வருகிறார்.
அந்த பணத்தை நிதி நிறுவனம் ஒன்றில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து அதை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஒரு நாள் வங்கிக்கு சென்று வரும் போது அங்கு பணிபுரிந்த ஷாலினி சிங் என்ற இளம் பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நட்பு பாராடிட்டிய இளம் பெண்தனக்கு துணையாக ஷாலினி இருப்பார் என்று ஜெரோன் நம்பும் அளவிற்கு நெருங்கிப் பழக தொடங்கினார்.
ஷாலினி கூறியதில் உச்சி குளிர்ந்து போன ஜெரோன் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை யடுத்து, ஷாலினியும், ஜெரோனும் பூங்கா, ரெஸ்டாரண்ட், மால் என ஜாலியாக சென்று நாட்களை கழித்துள்ளனர்.
ஒரு நாள் ஷாலினி தொழில் ஒன்றை தொடங்குவதற்காக ஜெரோனிடம் பணம் கேட்டுள்ளார். வரும் லாபத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அவரின் பேச்சைக் கேட்ட ஜெரோன் தன்னிடம் இருந்த 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.
இதில் அதிர்ச்சியடைந்த ஜெரோன் பலமுறை முயன்றும் பேச முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மும்பை அந்தேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ஷாலினி சிங் என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்தார்.
இருவரும் வெளியில் சென்று சுற்றினோம். தொழில் செய்தவாக கூறி ரூ.1.3 கோடி பணத்தை வாங்கிக் கொண்டு ஷாலினி தலைமறைவாகி விட்டார்..
தன்னுடன் இறுதி நாட்களில் செலவிடுவதாக கூறி விட்டு, தற்போது அவருடைய சொந்த கிராமத்தில் சென்று வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று ஜெரோன் புகாரில் கூறியுள்ளார். இதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Thanks for Your Comments