நீங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது பிரிமியம், எக்ஸ்ட்ரா பிரிமியம், பவர் பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் ஆகிய வகையிலான பெட்ரோல்கள் குறித்து நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம்.
நீங்கள் பெட்ரோல் பங்கிற்கு போகும் போது அங்கு பிரிமியம் மற்றம் ஸ்பீடு என்ற பெயர்களில் ஒரு வகை பெட்ரோல் இருக்கும். அது சாதாரண பெட்ரோலை விட சற்று விலை அதிகமாகவே இருக்கும்.
நீங்கள் பெட்ரோல் பங்கில் நீங்கள் கேட்டால் இந்த பெட்ரோலை போட்டால் நல்ல மைலேஜ் மற்றும் நல்ல பவர் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.
உண்மையில் நல்ல மைலேஜ் மற்றும் நல்ல பவர் கிடைக்குமா? நீங்கள் அதிக காசு கொடுத்து அந்த பெட்ரோலை போடும் அளவிற்கு அந்த பெட்ரோல் ஒர்த்ததானா?
என்பதை பார்பதற்கு முன்பு பெட்ரோலை எப்படி ரேட் செய்கிறார்கள். ஒரு எரிபொருளின் தன்மையை ஆக்டேன் ரேட்டிங் மூலம் கண்டறிகின்றனர்.
அதிக ஆக்டேன் ரேட்டிங் இருந்தால் சிறந்த பெர்பாமென்ஸை வழங்கும். ஆக்டேன் என்பது பெட்ரோலில் உள்ள ஹைட்ரோ கார்பனும், ஆல்கேனும் அதிகமாக கம்பஸ்ட் ஆகும் திறனை பொருத்து வழங்கப்படுகிறது.
கம்பிரஷன் ரேஷியோ அதிகமாக உள்ள இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ஆக்டேன் ரேட்டிங் அதிகமாக உள்ள பெட்ரோலை போட வேண்டும்.
இப்படி அதிக கம்பிரஷன் ரேஷியோ உள்ள வாகனங்களில் குறைந்த ஆக்டேன் ரேட்டிங் உள்ள பெட்ரோல்களை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இன்ஜினில் இருந்து மெட்டல்கள் உரசும் சத்தம் முதலில் வரும்.
இதற்கு முக்கிய காரணம் இன்ஜினிற்குள் செல்லும் பெட்ரோல் ஸ்பார்க் வருவற்தகு முன்பாகவே இன்னிஷியனை உரசுவது தான்.
அதிகமான கம்பிரஷன் ரேஷியோ உடன் கூடிய இன்ஜின்கள் எல்லாம் அதிக ஆக்டேன் ரேட்டிங் பெட்ரோலில் சிறப்பாக இயங்குபடி டிசைன் செய்யப்பட்டிருக்கும்.
அதிக ஆக்டேன் பெட்ரோல்களில் குறைவான வால்னேரபில் தன்மையுடன் இருக்கும் இது சாதாரண காரில் உள்ள இக்ஜிஷியன் உடன் மோதும் போது இந்த சத்தம் உருவாகும்.
இதன் காரணமாக தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார், ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியன ஒரு குறிப்பிட்ட ஒரு பெட்ரோல் பங்க்கில் மட்டுமே இதை பயன்படுத்துவர்.
அதிக ஆக்டேன் ரேட்டிங் உடைய பெட்ரோல்கள் நல்ல மைலேஜையும் வழங்கும். பெட்ரோலில் உள்ள பெரும்பாலான பாகங்கள் எரிந்து விடும்.
மேலும் ஆக்டேன் பெட்ரோல்கள் சாதாரண பெட்ரோலை விட குறைவான புகை அளவையே உமிழும். ஆனால் பல பெட்ரோல் பங்க்களில் சாதாரண பெட்ரோலையே பிரிமியம் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
அதில் உள்ள ஆக்டேன் ரேட்டிங்கில் எந்த வித மாற்றமும் இல்லை. நீங்கள் பிரிமியம் அல்லது ஸ்பீடு பெட்ரோலை போட விரும்பினால் அதன் ஆக்டேன் ரேட்டிங்கை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.இந்தியாவில் கிடைக்கும் சாதாரண பெட்ரோல் 91 என்ற ஆக்டேன் எண்ணைக் கொண்டது. ஒரு சில பிரீமியம் பெட்ரோல்கள் ஆக்டேன் எண்ணை அதிகரிக்காமலே சற்றே சிறந்த பண்புகளை உடையவை.
ஆனால் ஸ்பீட் 93, ஸ்பீட் 97 போன்ற பெட்ரோல்கள், 93 மற்றும் 97 ஆக்டேன் எண்களைக் கொண்டவை. (ஆக்டேன் எண் அதிகமானால் விலையும் அதிகம். பெட்ரோலின் குணமும் அதிகம்).
டீசல் எஞ்சின் அதிக அழுத்தத்தைக் கொண்டது. (சிலிண்டர் சுவர்களும் அதற்குத் தகுந்த அதிகப் பருமன் கொண்டவை).
ஸ்பார்க் பிளக் இருந்தால் தான் பெட்ரோல் வெடிக்கும். 91 ஆக்டேன் பெட்ரோல் கொஞ்சம் அழுத்தம் அதிகமானால் ஸ்பார்க் பிளக் இல்லாமல் சற்று முன்பே வெடித்து விடும்.
இதனால் 'நாக்கிங்' ஏற்படும். பெட்ரோல் வீணாகும். எஞ்சின் மற்றும் இதர பாகங்களின் வாழ்நாள் குறையும். அதே 93, 97 ஆக்டேன் பெட்ரோல்களாக இருந்தால், அவை அதிக அழுத்தத்தைத் தாங்கும்.
ஸ்பார்க் பிளக்கின் நேரம் (அதாவது முழு கம்ப்ரெஷனின் முடிவு) வரும் வரை வெடிக்காமல் காத்திருக்கும். வெடிக்கும் போது வெடித்துச் சிதறாமல் மிகச் சீராக வெடிக்கும். 'நாக்கிங்' ஒரு போதும் இருக்காது.
உங்கள் வண்டி 200 சிசிக்கும் அதிகம் என்றால், ஸ்பீட் பெட்ரோல் பயன்படுத்தலாம். குறைவான சிசி கொண்ட வண்டிகளில் ஸ்பீட் பெட்ரோல் பெரிய பலன் தராது.
ஏனெனில் குறைவான சிசி கொண்ட வண்டிகள் குறைவான உந்து சக்தியோடு செல்லவே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே பெரிய வித்யாசம் மெதுவும் அதில் தெரியாது.
Thanks for Your Comments