டெலிபிராம்ப்டர் (teleprompter) என்பது பேச்சாளருக்கு வசதியாக பேச வேண்டிய உரையை அவர் முன் காட்டும் மின்னணுவியல் கருவியாகும்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை படம்பிடிக்கும் காணொளி கருவியின் ஒளிப்பட வில்லையின் அருகில்,
வாசிப்பாளரின் கண்களுக்கு நன்கு புலப்படு மாறும் பெரிய எழுத்துக்களில் திரையிடப்படக் கூடிய வகையில் உள்ள ஒரு அமைப்பாகும்.
டெலிபிராம்ப்டர் தோற்றம்
பார்ட்டன் ஒரு நடிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச வேண்டிய விசயத்தை மறந்து விடும் சங்கடம் தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என நினைத்து இதற்கு மாற்று வழி தேடினார்.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
நாடகங்களில் துண்டுச் சீட்டுகளை எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பார்ப்பது போல,
கேமராவுக்குப் பின் தானாக இந்தத் துண்டுச் சீட்டுகளை ஓடச் செய்தால் என்ன என்று அவர் யோசித்தார்.
இப்படி தான் முதல் டெலிபிராம்ப்டர் 1950 -இல் உருவானது. இந்தக் கருவி பிரபலமாகி மேலும் பலரும் வேறு வடிவங்களில் தயாரிக்கத் தொடங்கினர்.
ஐ லவ் லூசி தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளரான ஜெஸ் ஓப்பன் ஹாமர் கேமரா ஒளி வில்லையில் எழுத்து வடிவம் எதிரோளிக்கும் சாதனத்தை உருவாக்கினார்.
சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !
அதனை அடுத்து, கணிணிகள் அறிமுகமான காலத்தில் கணினி சார்ந்த டெலிபிராம்ப்டர்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மேம்பட்ட வடிவமே தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் பயன்படுத்தப் படுகிறது.
டெலிபிராம்ப்டர் அமைப்பு
அதை பேசும் மேடையில் நின்றால் தெளிவாக தெரியும்படி மிகவும் மெல்லிய உயரமான கம்பியில் பொருத்தி விடுகிறார்கள்.
வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் !
மேடைப் பேச்சாளர்களுக்கு முன்பு இரு பக்கமும் 45 டிகிரி கோணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இந்தச் சாதனம் வெறும் கண்ணாடிப் பலகை போல காட்சி அளிக்கும்.
டெலிபிராம்ப்டர் செயல்படும் விதம்
இதைப் பேச்சாளர் மட்டுமே பார்க்க முடியும். பார்வையாளர் களுக்குக் கண்ணாடி மட்டும் தான் தெரியும். இதன் பயனால் பேச்சாளர் கீழே குணிந்து எழுதப்பட்ட உரையை கண்டு படிக்க வேண்டிய தேவை இருக்காது.
பென்டாவேலன்ட் தடுப்பூசி - Pentavalent vaccine !
திரையைப் பார்த்தபடி மனப்பாடமாக பேசுவது போல் பேசலாம். பார்ப்பவர்களுக்கு பேசுபவர், தம் முன் அமர்ந்துள்ளவர்களை பார்த்து பேசுவது போல் இருக்கும்.
ஏனெனில். முன்புறம் இருந்து மேடையை பார்ப்பவர்களுக்கு டெலி பிராம்டரில் ஊடுருவியபடி பேசுபவரின் முகம் தெரியும்.
மோடி
இந்தக் கருவியை தான் கடைசியாக மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது செய்தியாளர் களிடையே ஆங்கிலத்தில் உரையாற்றவும் பயன்படுத்தினார்.
குழந்தைகள் வளரும் பருவம்.. கவனிக்கவும் !
அதை பற்றி அறியாத சில பத்திரிகையாளர்கள், ஆங்கிலத்திலேயே மோடியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திடீர் என மோடி இந்தியில் பதில் அளிக்க வேண்டியதாயிற்று.
இதன் பிறகு அவர் டெலி பிராம்ப்டர் பயன்படுத்தியது தெரிய வந்தது. எனவே, ஒபாமா பாணியில் மோடியும் டெலி பிராம்ப்டர் கருவியை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கருவியை பொது இடங்களில் எந்தவித தயக்கம் இன்றி பயன்படுத்திய முதல் இந்தியப் பிரதமராக மோடி கருதப்படுகிறார்.
வெளிநாட்டு தலைவர்கள்
அதன் பிறகு 1954 -இல் அதிபர் ஐசன்ஹோவர் நாடாளுமன்ற உரைக்காக இதைப் பயன்படுத்தினார்.
டைனோசரின் ராட்சத தொடை எலும்பு?
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது வேட்பாளரான பராக் ஒபாமா, டெலிபிராம்ப்டரின் உதவியால் பிரச்சாரம் செய்து இருக்கிறார்.
இதன் மூலம் நாட்டிற்காக செய்ய இருப்பதை மிகவும் துல்லியமாக எடுத்துரைத்து மக்களை மலைக்க வைத்தது மிகவும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
Thanks for Your Comments