கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன? பகுதி 1

0

நம் உடல் மிகவும் சுவாரய்ஸ்மான விஷயங்கள் நிரம்பியவை. உயிரினங்களின் முழு உருவம், உடல் என்று அழைக்கப் படுகிறது. தமிழ் மெய்யெழுத்துக்கள், உடல் (மெய்) என்றும் அழைக்கப்படுகிறது.

கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன?
இறந்து போன உயிரினத்தின் சடலம். உயிர் நிலை பெற்றுள்ள இடம். இவற்றில் ஒன்றால் கால், கால் விரல்கள் இருக்கும் பகுதியில் சிறிய எலும்புகள், ஜாயிண்ட்ஸ், திசுக்கள் என ஏராளமன விஷயங்கள் இருக்கிறது. 

நாம் நடப்பதற்கும், நம்முடைய முழு உடலின் எடையை தாங்குவதற்கு ஏற்பவும் அவை வடிமைக்கப் பட்டிருக்கிறது. இவற்றில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட நம் உடல் இயக்கத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிடும். 

உங்கள் பாதத்தில் ஏற்படுகிற மிகச்சிறிய வலியோ அல்லது பிரச்சனையோ உங்கள் மொத்த உடல் நிலையை பாதிக்கும் அளவிற்கு கூட ஏற்படுத்திடும். 

அதனை கவனமாக கையாள்வது மிகவும் அவசியமாகும். நம் உடலினைத் தாக்கக்கூடிய பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறி சில நம் கால்களில் தெரியும். அவை என்னென்ன என்று பார்க்கலாம். 

சிலருக்கு கால் கட்டை விரலில் வலி இருக்கும். அவை குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கட்டை விரல் :

கட்டை விரல் :

விரல் என்பது கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. இவை நம் முழு உடல் எடையை தாங்கிடும் ஓர் உறுப்பு என்று அதனைச் சொல்லலாம். 

அதில் மிகச்சிறிய காயம் ஏற்பட்டால் கூட நாம் நடக்கும் விதத்தில் மாற்றமிருக்கும். இதில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் படுகிறது. அதன் தன்மையை பொருத்து பிரச்சனையின் தீவிரம் இருக்கும்.

வலி :

வலி

வலி என்பது உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படும் காயம், தசை மற்றும் எலும்பில் ஏற்படும் பிரச்சனை மேலும் காயம் பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று படும்பொழுது ஏற்படும் 

பயங்கரமான வேதனையளிக்கும் ஒரு உணர்வாகும். எடுத்துக் காட்டாக கால் விரலில் அடிபடுவது, விரலில் நெருப்பில் சுட்டுக் கொள்வது, 

வெட்டுக் காயத்தில் அயோடின் வைத்துக் கொள்வது மற்றும் "ஃபன்னி போன் எனப்படும் முழங்கை அல்னார் நரம்புப் பகுதியில்" இடித்துக் கொள்வது போன்ற தருணங்களில் பொதுவாக ஏற்படும் இனிமையற்ற உணர்வாகும்.

அது உங்கள் அன்றாட வேலையையே குலைக்கும் விதத்தில் இருக்கிறதா? அல்லது தாங்கக்கூடிய வலியா என்று பாருங்கள். 

இது வயது வித்யாசம், பாலின பேதமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது நம் உடலில் ஏற்பட்டிருக்கும் பிற நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஹாலுக்ஸ் ரிஜிடஸ் :

ஹாலுக்ஸ் ரிஜிடஸ்

இதுவும் ஒரு வகை ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை தான். இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்டை விரல் அதிக ஸ்டிஃபாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கும்.

நீண்ட நேரம் நடக்கும் போதோ அல்லது நீண்ட நேரம் நின்று பணியாற்று கிறவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் :

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்

முழங்கால் மூட்டுவலி வந்தவர்களில் முக்கால்வாசி பேருக்கு இந்த நோய் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. மூட்டுத் தேய்மானம் காரணமாக இது வருகிறது. 

முழங்கால் மூட்டில் உள்ள கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பை வழுவழுப்பாக வைத்துக் கொள்வது 'கொலாஜன்' எனும் புரதப்பொருள். முதுமை நெருங்கும் போது, இயற்கையாகவே இதன் உற்பத்தி குறைந்து விடும். 

குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிந்து விடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல, மூட்டுகள் உரசிக் கொள்ளும் போது, வலி ஏற்படுகிறது. 

ஆர்த்ரைட்டிஸ் கால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வலி கட்டை விரலுக்கு மட்டுமல்ல எல்லா எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகளிலும் வலி ஏற்படும். 

ஏற்கனவே லேசாக வலி ஏற்பட்டிருந்தாலும் நாம் நடக்கும் போது ஏற்படுகிற அழுத்தம் காரணமாக அதீத வலி ஏற்படும்.

கால் கட்டை விரலில் வலி ஏற்பட காரணம் என்ன? பகுதி 2

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings