தீர்ப்பு எழுதி விட்டு பேனாவின் நிப்பை நீதிபதி உடைப்பது ஏன்?

0

நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார், எழுதி விட்டு சபையில் உள்ள எல்லோருக்கும் தீர்ப்பை வாசித்து விட்டு, இறுதியாக தான் கையெழுத்து இடுவார். 

தீர்ப்பு எழுதி விட்டு பேனாவின் நிப்பை நீதிபதி உடைப்பது ஏன்?
பின்னர் கையெழுத்து போட்ட உடனே முற்றுப்புள்ளி வைக்கும் இடத்திலே பேனாவின் நிப்பை உடைத்து விடுவார். பெரும்பாலும் இந்த நிகழ்வை நேரில் காண யாருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. 

ஆனால், நமது இந்திய சினிமாக்களில் பலமுறை நாம் இதை கண்டுள்ளோம். மரண தண்டனை அளித்த பிறகு உடனே நீதிபதி அந்த பேனாவை உடைத்து விடுவார்.

எதற்கு அந்த பேனாவின் முனையை உடைக்க வேண்டும்? ஏன் வீணாக்குகிறார்கள்? ஒரு வேளை இதற்கு பின்னரும் ஏதாவது காரணம் இருக்குமா?

இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட நாடு. அவர்கள் கொண்டு வந்த சட்ட திட்டங்கள் பலவன 69 வருடங்கள் கடந்த பிறகும் கூட இன்றளவும் நாம் கடைபிடித்து வருகிறோம்.

ஆங்கிலேயர் கடைபிடித்து வந்த முறை தான் இந்த பேனா நிப் உடைப்பது

ஏன் என்றால், இது ஒரு மரபாக காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த பேனா இதையடுத்து வேறு எந்த மரண தண்டனையையும் எழுத கூடாது, 

இனி யாருடைய வாழ்க்கையையும் முடித்து வைக்க இனி இந்த பேனா பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக உடைத்து விடுகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறை தான் இந்த பேனா நிப் உடைப்பது. ஒரு நபரின் உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. 

சோகத்தை வெளிப்படுத்த தான் இதை செய்து வந்துள்ளனர். அது மட்டுமின்றி, தீர்ப்பு எழுதுபவர்களும் மனிதர்களே? 

மனிதனே மனிதருக்கு இரக்கமற்ற தண்டனையை கொடுக்கும் போது, மன அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாதென தங்களது பேனாவின் முனையை உடைத்து 

மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும்

அங்கேயே தங்களது எல்லா வேதனையையும் வெளிப்படுத்தத் தான் பேனா நிப்பை உடைப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த தீர்ப்பு பலமுறை சிந்தித்து தான் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் அதனை திருத்தி எழுதும் அதிகாரம் கிடையாது, 

இதுவே இறுதியானது, மறு பரிசீலனை செய்ய முடியாது என்பதை சுட்டிக் காட்டவே இப்படி பேனா நிப்பை உடைக்கிறார்களாம்.

ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings