கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்த மனைவி !

1 minute read
0

தமிழகத்தில் கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டில் புதைத்து வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்த மனைவி
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி (30) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த மாமனார் சகாயராஜுக்கு போன் செய்த சுஜித்ரா புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை காணவில்லை என கூறியிருக்கிறார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சகாயராஜ் வந்த போது வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டும் இருப்பதை கண்டார். குழந்தைகளிடம் விசாரித்த போது, காலையில் இருந்து அம்மாவை காணவில்லை என்றனர். 

இந்நிலையில், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டிய தடயம் இருப்பதை கண்ட சகாயராஜ், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பொலிசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து சந்தேகத்திற்கு இடமான இடத்தை தோண்டிய போது தலை மற்றும் கழுத்தில் இரத்த காயங்களுடன் புதைக்கப் பட்டிருந்த லியோ பாலின் சடலம் அழுகி நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

இது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதா கிருஷ்ணன் (20) என்பவருடன் காதலில் விழுந்திருக்கிறார் சுஜித்ரா.

இவர்களின் தொடர்பை கண்டுபிடித்த லியோபால் கண்டித்துள்ளார். இதையடுத்து இரண்டாம் காதலுக்கு இடையூறாக இருக்கும் முதல் காதல் கணவரை தீர்த்து கட்ட சுஜித்ரா முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த மாதம் 4ஆம் திகதி தூங்கி கொண்டிருந்த லியோபாலின் தலையில் இரும்பு ராடால் அடித்தும், 

கழுத்தை அறுத்தும் இருவரும் சேர்ந்து கொலை செய்து சடலத்தை வீட்டுக்கு பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

பின், கணவர் காணாமல் போனதாக சுஜித்ரா நாடகம் ஆடியதும், ராதா கிருஷ்ணனுடன் தலைமறைவானதும், விசாரணையில் தெரிந்தது.

இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 20, March 2025
Privacy and cookie settings