புனித ரமலானின் இறுதிப் 10 நாட்களில் ஓத வேண்டியது !

0

புனித ரமலானின் இறுதிப் 10 நாட்களில், அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ள மிக இலேசான முறை ஒன்றை, மக்கா இமாம் சேய்க் மாஹிர் அவர்கள் கூறுகிறார்கள்:

புனித ரமலானின் இறுதிப் 10 நாட்களில் ஓத வேண்டியது
1. இறுதிப் பத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு தீனார் (குறிப்பிட்ட சிறு தொகைப் பணம்) தர்மம் செய்து வந்தால், இதில் ஒரு நாள் கொடுத்த தர்மம், நிச்சயமாக லைலதுல் கத்ர் இல் கொடுபட்டிருக்கும்! 

அப்போது, அது ஒவ்வொரு நாளும் 84 வருடங்கள் தொடர்ந்து தர்மம் செய்த நன்மைகளை அள்ளித்தந்து விடும்!

2. இதே போல், ஒவ்வொரு இரவும், (நள்ளிரவுக்குப் பின் கியாமுல் லைல்) இரண்டு ரகஅத்துகள் தொளுது வந்தால், 

லைலத்துல் கத்ர் இரவில் தொழுதது, 84 வருடங்களாக தொடர்ந்து தினமும் தொழுது வந்த நன்மை கிடைக்கும்!

3. மேலும், இதே போல், ஒவ்வொரு இரவும், சூரத்துல் இஃக்லாசை, 3 முறை ஓதி வந்தால், லைலத்துல் கத்ர் இரவில் ஓதியது, 

84 வருடங்களாக தொடர்ந்து தினமும் முழுக் குர்ஆனையும் ஓதி வந்த நன்மையைத் தரும்!

ரமலான் பிறை முதல் பத்தில் அதிகம் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும்மர்ஹம்னா Bபிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாஹ்வே! கிருபையாளர்களுக் கெல்லாம் மாபொரும் கிருபையாளனே! உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.

கருப்பு எள் புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் !

ரமலான் பிறை இரண்டாம்  பத்தில் அதிகம் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும் மக்fபிர்லி துனூபி யாரBப்பல் ஆலமீன்".

அல்லாஹ்வே! ஆலத்தார்களின் இரட்சகனே! எங்களுடைய பாவங்களையும், எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

ரமலான் பிறை மூன்றாம்  பத்தில் அதிகம் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரBப்பல் ஆலமீன்".

அல்லாஹ்வே! ஆலத்தார்களின் இரட்சகனே! எங்களை நரகத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் அதிகம் ஓத வேண்டிய துஆ

اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அfப்வுன் துஹிப்Bபுல் அஃபஃவ ஃபஃபு அன்னி

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னித்து விடு!

இந்தச் செய்தியை பரப்புவதும், அல்லாஹ் நாடினால், பெரும் நன்மைகளை அள்ளித் தரும்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings