ஏழை எளியவர்களின் ஆரோக்யமே லட்சியம்… அனைவரும் பெறுவது நிச்சயம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட அம்மா க்ளினிக் கொரோனாவை சாக்காக வைத்து மூடப்பட்டுள்ளது
ஒரு மாதத்திற்குள்ளாகவே தமிழகம் முழுவதும் 2000 மின் கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.
சென்னையில் ராயபுரம், வியாசர்பாடி, மைலப்பூர் ஆகிய இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.
வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு !
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அதிகப்படுத்தப் பட்டுள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 13,000யை கடந்து செல்வதால், கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவ மனைகளில் கொரோனா வார்டுகளுக்கு மாற்றப் பட்டுள்ளன.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.
Thanks for Your Comments