வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு - 2021 !

0

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப் பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது.

கரோனா நோய் பரவல் நிலை, தற்போது அதிகரித்து வரும் நிலையிலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் 

இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும், கரோனா வைரஸ் பாதிப்புக் குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும்,

கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, 

கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியினை கடைப் பிடிக்காததாலும், 

நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் இன்று (18.4.2021) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். 

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள்  .தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பரவலின் இரண்டாம் அலை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாநிலத் தலைமைச் செயலாளர், பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது அறிவித்துள்ளன. 

இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளன.

இரவு ஊரடங்கு

இரவு ஊரடங்கு

அதன்படி தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

இதனால் இரவு நேரங்களில் தனியார்/ பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை. 

மேலும், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. 

அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகள்

அத்தியாவசியப் பணிகள்

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சரக்கு வானங்கள், எரிபொருள் வானங்கள் ஆகியவையும் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவில் செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

அதே நேரம் அத்தியாவசிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு எவ்வித தடைகளும் அறிவிக்கப் படவில்லை.

திருண நிகழ்வு

திருண நிகழ்வு

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண நிகழ்வுகளில் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

அங்கு கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலா தலங்கள்

சுற்றுலா தலங்கள்

அனைத்து நாட்களிலும் மாநிலத்திலுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. 

மாநிலத்திலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஐடி நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50% வீட்டிலிருந்த பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதம் சார்ந்த நிகழ்வுகள்

மதம் சார்ந்த நிகழ்வுகள்

மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புதிதாகக் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்

உணவகங்கள்

முழு ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 6-10, பகல் 12 -3, மாலை 6 - 9 வரை பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி இல்லை.

9 மணி வரை மட்டும் 

9 மணி வரை மட்டும்

தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், வணிக வலாகங்கள், ஷோ ரூம்கள், நகை மற்றும் 

ஜவளி கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கடைகளும் 50%இல் செயல்பட அனுமதி. இவை அனைத்தும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வுகள் ஒத்திவைப்பு

+2 தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. அதே நேரம் செயல்முறைத் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும். கோடைக் கால முகாம்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

கல்லூரி, பல்கலைக்கழக பாடங்களை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் எடுக்க வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டும் நடத்தப்பட வேண்டும். 

கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. 

கொரோனா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில், சென்னையில் கொரோனா கட்டுபாட்டு மையம் - 

044 - 46122300,

044 - 25384520

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings