முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி !

5 minute read
0

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் பலரை நீங்கள் கடைத் தெருவில், ரோட்டில், ஆஸ்பத்திரி வாசலில், கல்வி கூடங்களில், அரசு அலுவலகங்களில் என்று பல இடங்களிலும் பார்த்து இருப்பீர்கள்.

முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி !
இதில் பலரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வார்கள், சிலர் தாங்களே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டோ, அல்லது எரிபொருளின் உதவியுடன் உருளும்படி செய்தோ செல்வார்கள்.

சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் எல்லாம் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப் பட்டவர்கள் என்றே நம்மில் பலரும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். 

ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களில் பெரும்பாலோனார் முதுகுதண்டு வட பாதிப்பு அடைந்தவர்கள். முதுகு தண்டு வட பாதிப்பு என்பது கடுமையான விஷயமாகும்.

தலைக்கு பின் பக்கம் மூளையில் இருந்து ஆரம்பிக்கும் முதுகு தண்டு வடத்தினுள் செல்லும் நரம்புகள் தான் உடம்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் இயக்குகிறது, 

முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி !

கட்டுக்குள் வைக்கிறது. மூளையிடும் உத்திரவை இந்த நரம்புகள் தான் செயல்படுத்துகிறது.

இந்த நிலையில் முதுகு தண்டு வடத்தில் அடிபடும் போது எந்த இடத்தில் அடிபடுகிறதோ, அந்த பகுதியில் இருந்து அதன் செயல்பாடுகள் நின்று போகும்.

மருத்துவர், நுண் கருவிகளின் துணை கொண்டு, பாதிப்படைந்த நரம்பு/ சவ்வைச் சரி செய்கிறார். 

அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின் போது ஏற்படுகின்ற நரம்பு பாதிப்புப் பிரச்னை இல்லை.

அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும் போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். 

அவ்வளவு தான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்து போகிறார். 

முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி !

உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டவரைப் பரிசோதிக்கையில், அவருக்கு 'காடா ஈக்வினா' (Cauda Equina) எனும் முதுகுத்தண்டு நரம்பு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுவோர் எமர்ஜென்சி, 6 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் - 

இப்போது மேலுமொரு சிக்கல். அவரையும் காப்பாற்றி, மெடிக்கல் டீமுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எண்டோஸ்கோப்பி எனப்படும் நுண்துளை கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

ஜெனரல் அனஸ்தீஸியா கொடுக்க முடியாத இந்தப் பேஷண்டுக்கு லோக்கல் அனஸ்தீஸியா (பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து) கொடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. 

அடுத்த 6 மணி நேரத்தில் இக்கட்டான நிலையிலிருந்து மீண்ட நோயாளி இப்போது நலமாக உள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 4, April 2025
Privacy and cookie settings